Sunday, March 2, 2014

‘No fire Zone’ இல் வரும் நடிகர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்களே...! - பிரித்தானிய பாரளுமன்றம்

‘No fire Zone’ இல் வருபவர்களெல்லோரும் கூலிக்கு பணிபுரிந்த நடிகர்கள் என்று பாராளுமன்றம் “நோ பயர் ஸோன்“ சார்பில் தெளிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, இங்கிலாந்து செனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ள “நோ பயர் ஸோன்” திரைப்படத்தில் காட்சிகளில் வருகின்ற பெண்கள் இருவரும் பணம் கொடுத்து பெறப்பட்ட எல்ரீரீஈ உறுப்பினர்கள் என பிரித்தானிய கொன்ஸர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நெஸ்பி சாமி குறிப்பிடுகிறார்.

இலங்கை தொடர்பில் நேற்று முன்தினம் பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் நெஸ்பி சாமி இவ்விடயங்களைத் தெளிவுறுத்தினார் என பி.பி.ஸி செய்திச் சேவை குறிப்பிடுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பிலான ஆய்வு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரென் குறிப்பிட்டிருந்தாலும், அது பிரித்தானியாவின் ஏகோபித்த கருத்து அல்ல என விவாதத்தின்போது கொன்ஸர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com