Sunday, March 2, 2014

அஸ்பரின் கால்களில் விழுந்த புலிகள்!

குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்ற தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சியில் நாட்டிய கலைஞர்களாக பங்கேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்பர் எம். பி, ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க உள்ளிட்ட பிரமுகர்களின் பாதங்களை இவர்கள் தொட்டு வணங்கினர்.

ஜனாதிபதி செயலகத்தின் காட்சிக் கூடத்தை அண்டிய அரங்கத்தில் நடனம், இசை நிகழ்ச்சிகள் மேடை ஏற்றப்பட்டன. இதன்போது விருந்தினராக ஏ. எச். எம். அஸ்பர் எம். பி கலந்து சிறப்பித்தார். அப்போதே இப்பிரமுகர்களால் முன்னாள் புலிகள் ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.

அஸ்பரின் பாட்டு

பார்வையாளர்கள், இரசிகர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்துகின்ற வகையில் இவர் சின்ன சின்ன ஆசை… சிறகடிக்க ஆசை என்கிற சினிமாப் பாடலை இவருக்கே உரிய பாணியில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் மிக சுவாரஷியமாக பாடினார்.

நினைத்த மாத்திரத்தில் இரு மொழிகளிலும் பாட்டு சரிக் கட்டக் கூடிய திறமை உடைய இவர் மேன்மை மிகு மஹிந்த வெற்றி பெற ஆசை…. என்று இசையோடு பாடினார். இவரது பாட்டுக்கு ஆடல் அழகிகள் நாட்டியம் ஆடினார்கள். பார்வையாளர்களும் மேடையில் தோன்றி ஆட்டம் போட்டார்கள். இவர் பார்வையாளர்களை முற்றிலும் வசீகரித்து இருந்தார்.

பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள்

“ இக்கண்காட்சி வடக்கையும், தெற்கையும் சங்கமிக்க வைக்கின்ற பாலமாக அமைகின்றது. இங்கு வந்தபோது புதிய உலகத்துக்குள் புகுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

சிங்கள மக்களோடு பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டனர். பிள்ளைகளுடன் தமிழ் பெண்களும் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி மக்களுக்கு நல்ல படிப்பினை ஆகும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற தமிழ் பிள்ளைகள் மிக அருமையாக திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதே போல வடமேல் மாகாண பிள்ளைகளின் திறமைகளுக்கும் களமாக இக்கண்காட்சி அமைந்தது.

இக்கண்காட்சியில் பிரமிக்க வைக்கின்ற நவீன தொழினுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறான ஒரு அற்புதமான கண்காட்சியை நடத்துகின்றமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்காட்சி ஏற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய ஆகியோருக்கு எத்தனை நன்றிகளை கூறினாலும் தகும்.

ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க மிகவும் சிறப்பாக இந்நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்து உள்ளார். மிகுந்த கெட்டித்தனத்துடன் செயற்பட்டு உள்ளார். தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஜனாதிபதியின் சமூக அபிவிருத்தி பிரிவை இன்னமும் மேம்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ”

இதே நேரம் தேசத்தின் மகுடம் கண்காட்சி ஏற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய அடங்கலான அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பலரும் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் நடத்தப்பட்ட கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள்.3 comments :

கரன் ,  March 2, 2014 at 3:14 PM  

இந்தப்படங்களை கட்டாயம் ஒவ்வொரு புலம்பெயர் புலிப்பினாமியும் பார்க்க வேண்டும்.

இன்று இந்த இளைஞர் யுவதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை எவருக்கும் ஏற்படக்கூடாது.

புலம்பெயர் புலிப்பினாமிகள் தாங்கள் வாழும் நாடுகளில் சொகுசாக வாழ இந்த இளைஞர் யுவதிகளை இந்த இழி நிலைக்கு தள்ளியுள்ளனர்.

இவர்கள் இன்று அஸ்வரின் காலில் விழுவதற்கு யார் காரணம்?

Arya ,  March 2, 2014 at 9:15 PM  

புலம்பெயர் புலிப்பினாமிகள் தாம் சொகுசாக வாழ்வதட்காக புலிகளுக்கு கொடுத்த பணத்தால் தான் இலங்கையில் 30 வருடமாக அழிவுகள் ஏற்பட்டது , புலிகள் பொதுமக்களை கொல்வதுக்கு வாங்கிய ஆயுதங்கள் புலம்பெயர் புலிப்பினாமிகள் கொடுத்த பணத்தில் வாங்கப்பட்டது, புலம்பெயர் புலிப்பினாமிகளே உண்மையான யுத்த குற்றவாளிகள் , இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தக்க விதத்தில் இலங்கை அரசு செயல் படவேண்டும் .

முஸ்லிம் ,  March 3, 2014 at 3:06 PM  

இது ஒரு முஸ்லிமின் பண்பா? ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு தன் பாதம் தொட்டு சிரம் பணிவதை வெட்கமில்லாமல் அனுமதிக்கிறீரா? அஸ்பர் அவர்களே!!!! இறைவனை பயந்து கொள்ளுங்கள்.

இறை தூதர் முகம்மத்(அவர்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)(நபி)அவர்களுக்காக எழுந்து நின்று மரியாதை செய்வதையே அவர்கள் தடுத்தார்கள்.

ஆறு அறிவுகளையும் ஒரே இடத்தில் கொண்ட தலையை தாழ்த்துவது இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும். வேறு யாருக்காகவும் தாழ்த்துவதற்கு அனுமதியுமில்லை. இந்த உலகில் அதற்கான தகுதியும் யாருக்கும் இல்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com