Monday, March 3, 2014

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கான ஓய்வூதியம்!

யாழ். மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகள் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் காப்புறுதி உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி கடந்த தைமாதத்துக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடைய விவசாயிகள் கீழ் குறிப்பிடப்படும் திகதிகளில் தேசிய அடையாளஅட்டை, ஓய்வூதியப் புத்தகம் என்பவற்றுடன் நேரடியாக வந்து தத்தமது கமநல சேவை பிரிவுகளுக்குரிய இடங்களில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

நாளை மறுதினம் காலை 9 மணி முதல் 12 மணிரை புலோலி கமநல சேவை நிலையத்திலும் பி.ப. 1 மணிமுதல் பி.ப. 4 மணிவரை கரவெட்டி கமநல சேவை நிலையத்திலும் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை உடுவிலிலும், பி.ப. 1 மணி முதல் பி.ப.4 மணிவரை சண்டிலிப்பாயிலும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை சாவகச்சேரியிலும், பிற்பகல் 1 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை கைதடியிலும் நடைபெறவுள்ளதுடன்.

10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் 12 மணி வரை தொல்புரத்திலும் பி.ப.1 மணிமுதல் பி.ப. 4 மணிவரை காரைநகரிலும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல், நண்பகல் 12 மணிவரை கீரிமலையிலும், பி.ப. ஒரு மணிமுதல் பி.ப. 4 மணிவரை புத்தூரிலும், 12 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9 மணிமுதல் 12 மணி வரை வேலணையிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை குறிப்பிட்ட திகதிகளில் ஓய்வூதியத்தைபெற்றுக் கொள்ள முடியாதவர்கள் எதிர்வரும் 13ஆம், 14 ஆம் திகதிகளில் பலாலி வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள கமத்தொழில் காப்புறுதிச்சபையின் மாவட்ட காரியாலயத்தில் வந்து பெற்றுக்கொள்ள முடியும் என கமத்தொழில் காப்புறுதி உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com