Monday, March 3, 2014

முடி கொட்டுவதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்!

பெரும்பாலானவர்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்பதுடன் இது அவர்களுக்கு மன உலைச்சலையும் ஏற்படுத்துகிறது எனவே முடி அதிகம் கொட்டுகிறதே என்று கவலைப்பட்டால் இன்னும் தான் முடி கொட்டும் எனவே கவலையை நிறுத்தி, இந்த நெல்லிக்காய் தைலத்தைத் தலையில் தேயுங்கள் மாயாஜாலம் நிகழும். 

பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை – தலா 100 கிராம் எடுத்து நான்கையும் சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரைத்து வரும் விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுங்கள் அப்ஆபோது அதிலிருந்து துளி துளியாக சாறு சொட்டும் இந்த சாற்றினை சேமித்து, இதன் அளவில் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி வரும் எண்ணையை தினமும் தலையில் தடவி வர முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரவும் தொடங்கும்.

பனிகாலம் தலையில் பனித்துளிகளைப் போன்று பொடுகும், செதில்களும் வந்து இம்சிக்கும் எனவே இதைப் போக்கி நிம்மதி தருகிறது நெல்லிக்காய் பேஸ்ட்.

இதற்கு வெந்தயப்பொடி – 1 டீஸ்பூன், கடுக்காய் பொடி- அரை டீஸ்பூன், கடலை மாவு -3 டீஸ்பூன் இந்த மூன்றையும் கலக்கும் அளவுக்கு எலுமிச்சைச்சாறு, பச்சை நெல்லிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை தலைக்கு `பேக்’ ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே தண்ணீர் விட்டு அலசுங்கள் வெந்தயம், கடுக்காய், கடலை மாவு மூன்றும் தலையை சுத்தப்படுத்தி செதில்களை நீக்கும் என்பதுடன் எலுமிச்சைச்சாறு தலையில் உள்ள அரிப்பைப் போக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com