Monday, March 17, 2014

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தில் அதிகரிப்பு!

கடந்த ஒரு வருடத்திற்கு முந்தைய நிலையை விட பெப்ரவரி 2014 வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 24.5 வீதத்தால் (141,878) அதிகரித்துள்ளது என இலங்கை அரசு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

இவற்றில் அதிகம் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலிருந்தே மிக அதிகப்படியானோர் வருகை தந்துள்ளனர் எனினும் 2014 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாத காலத்தில் வருகை தந்தோரது தொகை மட்டும் கடந்த 2013 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியைவிடவும் 28.5 வீதத்தால் (288,453) அதிகரித்துள்ளது என சுற்றுலாத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாது தென்னாசியாவிலிருந்து வருகை தந்தோரது தொகை, 2013 பெப்ரவரியை விடவும், 2014 பெப்ரவரி மாதத்தில் 22.9 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் இந்தியாவில் இருந்து வருவோரின் எண்ணிக்கை 21.5 வீதத்தாலும் (17,534), மாலைதீவிலிருந்து வருவோரின் எண்ணிக்கை 21.4 வீதத்தாலும் (5,549) அதிகரித்துள்ளதுடன் மேற்கு ஐரோப்பாவிலிருந்து வருவோரின் எண்ணிக்கை 15.7 வீதத்தால் (52,635) அதிகரித்துள்ளது.

இவற்றில் பிரித்தானியர்களின் எண்ணிக்கை 5.2 வீதத்தாலும் (14,316), ஜேர்மனியர்களின் எண்ணிக்கை 15 வீதத்தாலும் (11,305), பிரான்ஸ் நாட்டினாரின் எண்ணிக்கை 28.6 வீதத்தாலும் (10,617), சுவிற்ஸர்லாந்து நாட்டவரின் எண்ணிக்கை 9.3 வீதத்தாலும் (2,244), ஒஸ்ரியா நாட்டவரின் எண்ணிக்கை 10.4 வீதத்தாலும் (2,086), நெதர்லாந்து நாட்டினரின் எணண்ணிக்கை 13.2 வீதத்தாலும் (2,066) அதிகரித்துள்ளதாக அரச சுற்றுலாத் துறையின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com