Friday, March 7, 2014

ஆசிரியைகள் இருவரின் ஏடா கூடாவார்த்தைகளும் கைகலப்பும்…. மாணவர்கள் ஒரே ஓட்டமும்...

5 ஆம் தரத்தில் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவருக்கு, மாணவர்களின் முன்னிலையில் 4 ஆந் தர ஆசிரியை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் காரசாரமாக பாய்ந்து விழுந்து, செருப்பினாலும் கைகளினாலும் பலமாக தாக்கிய சம்பவம் கம்பளை பிரபல பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றதாக செய்திகள் கசிகின்றன.

இந்த நிகழ்வினால் பெரும் குழப்பமடைந்த மாணவர்கள் பயந்து, சத்தமிட்டுக் கொண்டு வகுப்பிலிருந்து ஓடியிருக்கின்றனர்.

கம்பளை நகரில் ஒரே பெயரில் இயங்குகின்ற ஆண்கள், பெண்கள் பாடசாலையின் பெண்கள் பாடசாலையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் இப்பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர். அப்போது கல்விப் பணிப்பாளர், அங்கு கூட்டமொன்றைக் கூட்டி ஐந்தாந் தர புலமைப் பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை மாணவர்கள் பெறுவதற்காக ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அங்கு ஐந்தாந் தர ஆசிரியை, தான் இதுவரை எதிர்நோக்கும் பிரச்சினையில் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது, தரம் 4 இலிருந்து வருகின்ற மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் குறைவாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அன்று தரம் 4 இன் பொறுப்பாசிரியை பாடசாலைக்கு வராதிருந்திருக்கிறார். அடுத்த நாள் பாடசாலைக்கு வந்ததும் விடயங்கள் விலாவாரியாக அவரிடம் சொல்லப்பட்டிருக்கின்றன.

தன்னைப் பற்றி குற்றம் சுமத்தினார் தரம் 5 இற்குப் பொறுப்பான ஆசிரியை என்று கோபம் கொண்டு, தரம் 5 வகுப்பிற்குச் சென்று, பொறுப்பாசிரியை சரமாரியாகத் தாக்கியுள்ளார் தரம் 4 ஆசிரியை.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  March 8, 2014 at 5:44 AM  

அரோகரா!!!!!!! நாகரிகம் முற்றி விட்டது இலங்கையில்
வாழ்க வாழ்க வளம் பெறுக ஆசிரிய மணிகளே !!!!!!!!

வேசைஎன்று மாணவியைத் திட்டிக் கொலை செய்தீர்
காசை உழைப்பதற்கு பல வழிகள் உண்டு உலகினிலே
ஆசிரியத் தொழில் வேண்டாம் அறிவற்ற உங்களுக்கு
தோசை சுட்டுப் பிழைத்தல்தான் தோதான தொழிலாகும்

- ஸ்ரீதரன் கனடா

Anonymous ,  March 8, 2014 at 5:45 AM  

அரோகரா!!!!!!! நாகரிகம் முற்றி விட்டது இலங்கையில்
வாழ்க வாழ்க வளம் பெறுக ஆசிரிய மணிகளே !!!!!!!!

வேசைஎன்று மாணவியைத் திட்டிக் கொலை செய்தீர்
காசை உழைப்பதற்கு பல வழிகள் உண்டு உலகினிலே
ஆசிரியத் தொழில் வேண்டாம் அறிவற்ற உங்களுக்கு
தோசை சுட்டுப் பிழைத்தல்தான் தோதான தொழிலாகும்

- ஸ்ரீதரன் கனடா

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com