Monday, March 24, 2014

கிரிமியா இணைப்பு குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிரான போர்அச்சுறுத்தல்களை தீவிரமாக்குகின்றன.

By Johannes Stern and Alex Lantier

உக்ரேனிய நெருக்கடியை கிழக்கு ஐரோப்பா மற்றும் யூரேசியாவில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை பரந்து விரிவாக்க ஒருபோலிக்காரணமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நன்கு தயாரிக்கப்பட்ட அதன் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளும் நேற்று ரஷ்யா உத்தியோகபூர்வமாக கிரிமியா இணைத்ததற்கு பதிலளிக்கும் வகையில் மாஸ்கோவிற்கு எதிராக நேட்டோவை நிரந்தர போர்த்தயாரிப்பு நிலைப்பாட்டில் நிறுத்தும் ஒரு இராணுவ தயாரிப்புக்கு அழைப்பு விடுத்தன.

வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் சிந்தனைக்குழுவில் நேற்று பேசிய நேட்டோவின் செயலர் ஜெனரல் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசென் பின்வருமாறு கூறினார்: “சீமான்களே, சீமாட்டிகளே, ஒரு மாதம் முன் இருந்த உலகை விட வேறு உலகில் இப்பொழுது நாம் வாழ்கிறோம்.... கிரிமியாவை இணைப்பதற்கான துப்பாக்கி முனையில் நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு எனப்படுவது சட்டவிரோதமானதும் நெறியற்றதுமாகும்.”

நேட்டோவின் நடவடிக்கைகளில் பேரழிவுகரமான விளைவுகளின் சாத்தியப்பாடுகளை உள்ளடக்கியிராது என கருதினால் ராசமுசெனின் அறிக்கைகள் மிகவும் கேலித்தன்மையுடையதாக இருந்திருக்கும். ஆனால் அவர் கூறியது எதுவும் உண்மையுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை.

ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு ஒரு அமைதிவாத எதிராளியாக நேட்டோவை சித்தரித்துள்ளது ஒரு அரசியல் மோசடி ஆகும். பெரும்பான்மையினரான ரஷ்ய மொழி பேசும் கிரிமிய மக்கள் ரஷ்யாவுடன் சேரப் பெரும்பான்மையில் வாக்களித்தனர். இது உக்ரேனில் கியேவில் பெப்ருவரி 22 அன்று பாசிசத் தலைமையிலான ஆட்சிசதிக்கு ரஷ்ய விரோத மற்றும் யூதஎதிர்ப்பு சக்திகளுக்கு மேற்கு சக்திகளின் ஆதரவினால்தான் முக்கியமாக நடந்துள்ளது. கியேவை இப்பொழுது ஆளும் ஆட்சி, ரஷ்ய எதிர்ப்பு பேரினவாத்த்திற்கு அழைப்புவிடுவதுடன் தன் விரோதிகளை அச்சுறுத்த வன்முறையை நம்பியுள்ளது.

ராஸ்முசென், மாஸ்கோவை தனிமைப்படுத்தி, அமெரிக்க, ஐரோப்பிய அரசியலை தீவிரமாக வலதுபக்கம் திருப்புவதற்கு ரஷ்யாவிற்கு எதிரான போர் வெறியை தொடர்ந்து தூண்டும் ஒரு கொள்கையை விவரிக்கின்றார். இதில் ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவ நிலைநிறுத்தல் மற்றும் இராணுவச் செலவு அதிகரிப்பும் அடங்கும். இக்கண்டம் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களாலும் சிக்கன நடவடிக்கைகளினாலும் திவாலாகியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டிடம் ராஸ்முசென் இப்பொழுது “ஐரோப்பா, இராணுவத்திற்கும் பாதுகாப்பிற்கும் அதிகம் முதலீடு செய்யவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார். “பல ஐரோப்பியர்கள் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் உறுதிப்பாடு மறுஉறுதி செய்யப்பட வேண்டும் என விரும்புவர்... உக்ரேன் நிகழ்வுகள் ஐரோப்பிய பாதுகாப்பு நீடித்து இருக்கும் என்பது உறுதியளிக்க முடியாதது என்பதை உறுதியாகக் காட்டுகிறது” என்று சேர்த்துக் கொண்டார். “ரஷ்ய ஆக்கிரமிப்பு நம் பாதுகாப்பில் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால மூலோபாய தாக்கத்தைப் பற்றி நாம் கவனம்செலுத்தவேண்டும்” என்றார் அவர்.

இக்கொள்கை இப்பொழுது வாஷிங்டனுடன் நெருக்கமாக இணைந்து நடாத்தப்படுகின்றது. இந்த உரைக்கு முன்னால் ராஸ்முசென் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல், வெளிவிவகார செயலர் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் ஆகியோருடன் ஒரு “பணியுடன் கூடிய இரவுவிருந்தில்” கலந்து கொண்டார். ஹேகல், உக்ரேன் மற்றும் அமெரிக்க இராணுவச் செலவுகளை விவாதிக்கும் வணிக வட்டமேசை (Business Roundtable) என்ற செல்வாக்கு மிக்க அமெரிக்க வணிக அமைப்புடன் கலந்துரையாட தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இக்கொள்கைகள், நேட்டோவை ரஷ்ய எதிர்ப்பு இராணுவக்கூட்டாக மாற்றும் நோக்கம் கொண்டவை. இக்கொள்கையின்படி முன்னாள் சோவியத் அரசுகள், ரஷ்ய எல்லைகள் முழுவதும் புறச்சாவடிகளாக மாற்றப்பட்டு இது மாஸ்கோ மீது நிரந்தர இராணுவ அழுத்தம் கொடுத்து போரை விரிவாக்க அச்சுறுத்தும். அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பைடென் இராணுவ முறையில் ரஷ்யாவை தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் கொள்கையைக் கோடிட்டார். இது பால்டிக் நாடுகளில் அதிகாரிகளுக்கு லித்துவேனியாவின் வில்னியஸ், நகரில் அவர் கூறிய கருத்துக்களில் வெளிப்பட்டது. கியேவ் அரசாங்கத்தின் பிரதம மந்திரியும் முன்னாள் வங்கியாளரான ஆர்செனி யாட்செனியுக்குடனும் அவர் தொலைபேசியில் உரையாடல் செய்தார்.

கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளுக்கு இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தை பலப்படுத்திவரும் நேரத்தில் வாஷிங்டன் பரந்த இராணுவ உத்தரவாதங்களை உறுதிப்படுத்தினார். இதில் போலந்து, ருமேனியா மீது கண்காணிப்பு விமானங்களை பயன்படுத்துதல், போலந்திற்கும் பால்டிக்கிற்கும் போர் விமானங்கள் வழங்குதல் மற்றும் பிராந்தியத்தில் பயிற்சி நடவடிக்களை அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.

“ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, நம் பால்டிக் நட்பு நாடுகளுடன் உக்ரேனிய மக்களுக்கு ஆதரவாக நாம் உறுதியாக உள்ளோம். ரஷ்யா தன் இந்த இருண்ட பாதையைத் தொடரும் வரை, அவர்கள் அதிக அரசியல், பொருளாதாரத் தனிமைப்படலை முகங்கொடுப்பர்” என்றார் அவர்.

அவர் மேலும் : “பால்டிக்கிற்கு நான் பயணித்த காரணம், நம் பரஸ்பர கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யத்தான். நானே நேரே இங்கு வந்து உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை தெளிவாக்க வேண்டும் என ஜனாதிபதி ஒபாமா விரும்பினார். நேட்டோ உடன்பாட்டின் 5வது விதியின்கீழ் நாம் பதிலளிப்போம். ஒரு நேட்டோ நட்பு நாட்டிற்கு எதிரான எந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் நாம் செயற்படுவோம்.” எனக் கூறினார்.

நேட்டோ உடன்பாட்டின் 5வது விதியின்படி, “ஐரோப்பாவிலோ அல்லது வடக்கு அமெரிக்காவிலோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீதான ஆயுதமேந்திய தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாக அங்கத்துவநாடுகளால் கருதப்படும்.”

இந்த நடவடிக்கைகள், பரந்த ஆக்கிரமிப்பு மிகுந்த ஏகாதிபத்தியக் கொள்கையை பிரதிபலிக்கும் இராணுவ அழுத்தங்களுக்கு எரியூட்டுகின்றன. அவை ஜேர்மனியில் இராணுவ நடவடிக்கைகள் முழு விரிவாக்கம் கொண்டிருப்பதில் முழு வெளிப்பாட்டைக் காண்கின்றன. ஜேர்மனி அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரேன் குறித்து ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு ஆக்கிரோஷமாக அழுத்தம் கொடுக்கிறது.

ஜேர்மனிய செய்தி ஊடகம் ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு மிக்க இராணுவ தயாரிப்பிற்கான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளது. இன்றைய Süddeutschen Zeitung பத்திரிகையின் முக்கிய கட்டுரை ஒபாமா “பனிப்போர் வரலாற்றில் இருந்து ஒரு படிப்பினையை” எடுக்க வேண்டும் என்று அழைப்புவிடுகின்றது. “ஒபாமா தன் கரத்தை அனைவருக்கும் நீட்டுகையில் உலகம் தானே முன்னேறாது. அவர்கள் ஒபாமாவை சாதாரணமாக சலிப்புறச்செய்வதால் சிரியா அல்லது உக்ரேன் நெருக்கடி மறைந்துவிடுவதில்லை.”

இதன்பின் Süddeutschen Zeitung நேட்டோவை ஒரு “சர்வதேச ஒழுங்கமைப்பின் அடிப்படை அஸ்திவாரம் என புகழ்கின்றது. உக்ரேன் போல் எந்த நாடும் நேட்டோவிலோ அல்லது மேற்கிலோ அல்லது கிழக்கிலோ இல்லையெனில் விரைவில் அண்மையில் இருக்கும் சர்வாதிகாரிகளின் ஆசைக்கு ஒரு இரையாகின்றன. மறுபக்கத்தில் பால்டிக் நாடுகளும் போலந்தும், புட்டினின் சிறப்புப் படைகளிடம் இருந்து காப்பாற்றப்படும் என்பது குறித்து உறுதியாக இருக்கலாம்.” என்று பாராட்டியுள்ளது.

Frankfurter Allegemeine Zeitung பத்திரிகையை பொறுத்தவரை நேட்டோவின் விடையிறுப்பு போதுமானதாக இல்லை. அது: “நேட்டோ ரஷ்யாவிற்கு ஒரு அச்சுறுத்தல் இல்லை என்பதை புட்டின் அறிவார். கிரிமிய நெருக்கடியில் பிஜித் தீவுகள் மட்டும்தான் நேட்டோ தலைமையைவிட இன்னும் நிதானமாக எதிர்கொள்ள முடிந்திருக்கும்.” என குற்றம்சாட்டினார்.

ஆக்கிரமிப்பின் தன்மை, திரிபுபடுத்தல் மற்றும் ஜேர்மனிய ஊடகத்தின் அப்பட்டமான பொய்கள், ஹிட்லரின் கீழ் கோயபல்ஸின் பிரச்சார அமைச்சரக காலத்தில் நடாத்தப்பட்ட பின் இவ்வாறு கேட்கப்படவில்லை. செய்தி ஊடகம் பெருகிய அளவிற்கு ஜேர்மனிய இராணுவத்தின் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஆதரவு கொடுக்கிறது. இதற்கு ஜனாதிபதி ஜோஅகிம் கௌவ்க் இந்த ஆண்டு முன்னதாக மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கூறினார்.

சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலும் மற்ற ஜேர்மனிய அரசின் முக்கிய நபர்களும் தூண்டுவதில் முக்கிய பங்கு கொண்ட உக்ரேனிய நெருக்கடி, நாட்டின் வெளியுறவுக் கொள்கை, ஒரு கவனமாகத் திட்டமிடப்பட்ட இராணுவ மறுசார்பு கொள்வதை செயல்படுத்த போலிக்காரணத்தை அளிக்கிறது.

சரியாக ஒரு மாதம் முன்பு, பெப்ருவரி 21, 2014 அன்று வாஷிங்டனின் முக்கிய சிந்தனைக்குழுவான சர்வதேச ஆய்வுக்கான மூலோபாய மையத்தின் (CSIS) அறிக்கை ஒன்றை “ஜேர்மனி வழிநடத்த தயாரா? என்ற தலைப்பில் வெளிவிட்டது. “ஓராண்டு காலமாக ஜேர்மனிய அதிகாரிகள் இன்னும் ஆக்கிரோஷமான வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைப் பக்கம் மாற கவனத்துடன் தயாரிப்புக்களை நடத்துகின்றனர்.” என விளக்கியது.

இப்பகுப்பாய்வு முன்னாள் வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லவை அகற்றுவது இப்புதிய கொள்கையை செயல்படுத்தத் தேவையாக இருந்தது என்று கூறியுள்ளது. இந்த அமைப்பு செய்தி ஊடகத்தில் நடத்தப்படும் “பொது விவாதத்தில் “ உள்ள அடையாளங்களையும் வரவேற்றுள்ளது. அதாவது முடிவிலா இராணுவப் பிரச்சார அலை “ஜேர்மனிய உயரடுக்கின் மத்தியில் ஒரு புதிய கருத்து வெளிப்படலாம்”, “காலம் செல்லச் செல்ல பொதுமக்களும் அதைப் பின்பற்றலாம்.” என கூறுகின்றது.

இப்பொழுது பாசிசத் தலைமையிலான கியேவின் பெப்ருவரி 22 அன்று ஆட்சிசதிக்கு பேர்லின் முக்கிய பங்கு வகித்திருக்கையில், ஜேர்மனிய உயரடுக்கு ஜேர்மனியின் மீது இரண்டாம் உலகப் போருக்குப்பின், நாஜிக்களின் கொடூரக் குற்றங்களை தொடர்ந்து சுமத்தப்பட்ட இராணுவ கட்டுப்பாடுகளை நிராகரிக்கும் காலம் வந்து விட்டது என உணர்கிறது. ரஷ்யாவுடனான மோதலுக்கு எரியூட்டுவது கிழக்கு ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தி என்பதை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான அதன் மரபார்ந்த பாத்திரத்தை தொடர்வதுதான்.

இன்றும் நாளையும் பிரஸ்ஸல்ஸில் நடக்கும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மன் அமைச்சரவை உக்ரேனுடனான ஐரோப்பிய கூட்டுழைப்பு உடன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் முன்னுரையில் “உக்ரேன் படிப்படியாக ஐரோப்பிய ஒன்றிய உட்சந்தையில் இணைய வேண்டும்.... சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறுவதை பூர்த்திசெய்யும் உக்ரேனிய முயற்சிகளுக்கு ஆதரவுகொடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, பேர்லினும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் உறவுகளை உக்ரேனிய அரசாங்கத்தில் உள்ள பகிரங்கமான பாசிசவாதிகளுடன் ஆழப்படுத்தி, நாட்டை ஐரோப்பிய நிதிமூலதனத்திற்கு குறைவூதிய தொழிலாளர் அரங்கமாகவும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவத் தூண்டுதல்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தினதும் நேட்டோவினதும் புறச்சாவடியாக மாற்ற முனைகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com