Saturday, March 8, 2014

திருக்கேதீஸ்வர மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பிரதேசம், புராதன மயானம்- தொல்பொருள் திணைக்களம்

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பிரதேசம் புராதன மயானம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தொல்பொருள்திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவு பணிப்பாளர், நாமல் கொடிதுவக்க தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனையில் தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட அகழ்வாராய்ச்சியாளரான ஏ.ஏ.விஜேரத்னவும் பங்கேற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த மயானம் ஆனது சுமார் 100 அல்லது 150 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த பகுதியில் இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அது மட்டும்லாது அனைத்து உடல்களும் மேற்குத் திசையில் தலைப்பகுதி இருக்கும் வகையிலும், உடல்களின் கைகள் வயிற்றின்மீது வைக்கப்பட்டும் புதைக்கப்பட்டுள்ளன எனவே, புதைக்கும்போது சம்பிரதாயபூர்வமான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளமை அப்பகுதி மயானம் என்பதை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அருகில் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டமையே மயானம் கைவிடப்பட்டமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பிரதேசம் தொடர்பான தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கை (06.03.2013) மன்னார் நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com