Saturday, March 8, 2014

வீதிப் புனரமைப்பு பணியில் மேற்கொள்ளப்பட்ட குளறுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மல்லாவி மக்கள்!

மாங்குளம் நகரிலிருந்து மல்லாவி நகரை ஊடறுத்து வெள்ளாங்குளம் நோக்கி பயணிக்கும் வீதியில், மல்லாவி நகர்ப்பகுதியில் நிர்மாணிப்பு பணிகளில் குளறுபடி நடந்துள்ளதாக தெரிவித்து மல்லாவி பிரதேச மக்களும், வர்த்தகர்களும் நேற்று(07.03.2014) காலை மல்லாவி மத்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

குறித்த வீதியானது, வீதியின் இருமருங்கும் அமைந்துள்ள தமது கடைத்தொகுதிகளுக்கு முன்னால் சமதரை வடிவமைப்பு வீதியாக அமைக்கப்படாமல், சுமார் நான்கடி உயரத்தில் அமைக்கப்பட்டிருப்பதால், பொருள்கள் கொள்வனவு-விற்பனை தொடர்பான தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலகுவான பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவர்கள் தமது வர்த்தக வாணிப நிலையங்களை மூடி அடையாள கதவடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இது மட்டும்லாது பிரதான போக்குவரத்து வீதியில் டயர்களை தீயிட்டுக்கொளுத்தி வீதி மறியல் போராட்டத்தில் இறங்க முற்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மல்லாவி பொலிஸ் அத்தியகச்சர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன் பொது சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்தாமல் வீதியின் அருகில் நின்று போராட்டத்தில் இடுபடுமாறும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஆதரவினை தருவதாகவும் குறிப்பிட்டதுடன் ஆர்ப்பாட்டம் முடியும் வரை பாதுகாப்பையும் கொடுத்திருந்தகர்.

இந்த சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கொட்டும் வெயிலில் நிக்க வேண்டாம் வாருங்கள் என நிணல் கொடுத்து மக்களை ஏமாற்ற முனைந்ததடன் சிலர் அதனை நம்பி சென்றதுடன் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெயிலிலேயே நின்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று துணுக்காய் பிரதேச செயலகத்துக்குச்சென்று, பிரதேச செயலருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர் இதன் போது கருத்து தெரியிவத்த பிரதேச செயலாளர் ஏசியன் அபிவிருத்தி வங்கி நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றுவரும் குறித்த வீதி நிர்மாணப்பணிகள் மக்களது ஆர்ப்பாட்டத்தையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டு நிதி திருப்பி அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், நிதி திருப்பி அனுப்பப்பட்டால் குறித்த வீதி காலத்துக்கும் குறை நிலையிலேயே இருக்கப்போகின்றது என்றும் பிரதேசசெயலாளர் கூறினர் எனினும் இதனை மக்கள் மறுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்த தமது கோரிக்கைகளுக்கு இணங்கி சாதகமான முடிவுகளை எடுக்குமாறு பிரதேச செயலாளரை கேட்டுக்கொண்டனர் இதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் வீதி நிர்மாணிப்பு பணிகள், அதன் திட்டம், வடிவமைப்பு, வெளிப்படைத்தன்மை பற்றி வீடியோ விவரணம் மூலம் மக்களுக்கு விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இது மட்டும்லாது துணுக்காய் பிரதேச செயலகமும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள மூன்று நாட்கள் கால அவகாசமும் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com