Monday, March 17, 2014

சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் தோற்றது நாட்டின் பேரதிஷ்டமே! - அனோமா பொன்சேக்கா

சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் தோற்றது நாட்டின் நன்மைக்கே என அவரின் மனைவி அனோமா பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உதவிச் செயலாளரும் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான மாலா விஜேதிலக்கவிடமே குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அக்கட்சியினின்றும் நீங்கி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துகொண்ட அவர் இதனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

“தொலைக்காட்சியில் உரையாற்றும் பொன்சேக்காவல்ல அவர். அவர் புதுமையானதொரு பாத்திரம். நான் அக்கட்சிக்கு பெரும் பங்களிப்பு நல்கினேன். என்றாலும் என்னை இரண்டாந் தரமாகவே கணித்தார்கள்.

சகோதர நிறுவனமொன்று அமைத்திருப்பதாக பொன்சேக்கா, ஜனாதிபதியை திட்டுகிறார். அவரிடம் மனைவியும் சகோதர்ர்களும் கூடிய நிறுவனமே இருக்கின்றது. அவர் பாராளுமன்றத் தேர்தல் காலகட்டத்தில் அவரது குடும்ப அங்கத்தவர்களையே குழு உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார். அனோமா எனது நெருங்கிய சகோதரியொருத்தி. அவருக்கும் பழையவை மறந்துபோயுள்ளது. பொன்சேக்காவிடமிருந்து விலகி நடக்குமாறு நிறையப்பேர் என்னிடம் சொன்னார்கள்.

கடைசியாக அனோமாவும் என்னிடம் சொன்னார். “அக்கா, நீங்கள் அவருடைய வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என. நாட்டின் பேரதிஷ்டத்திற்கே அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவில்லை. என மாலா விஜேத்திலக்க குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  March 18, 2014 at 12:53 PM  

சரத் பொன்சேகா, ரணில் இவர்களுக்கு தலைமை வகிக்க தகுதியில்லை. இவர்களுக்கு காணாது. எது? அது தான் . VS.Drammen

Anonymous ,  March 18, 2014 at 12:53 PM  

சரத் பொன்சேகா, ரணில் இவர்களுக்கு தலைமை வகிக்க தகுதியில்லை. இவர்களுக்கு காணாது. எது? அது தான் . VS Drammen

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com