Tuesday, March 4, 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை மூன்று நாடுகளுடன் இணைந்து ஐ.நா வில் சமர்பித்தது அமெரிக்கா!

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளனன. அமெரிக்கா பிரிட்டன் மொன்டினீக்ரோ, மொரிசியஸ் ஆகிய நாடுகள் இதற்கு முன்நின்றுள்ளன. இன்று ஜெனீவா சென்ற அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், நாளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவுள்ளார்.

தாயகத்திற்கு எதிராக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் பிரேரணைகளுக்கு பதிலளிப்பதற்கும், அதனை கண்டித்து கருத்து தெரிவிப்பதற்கும், இலங்கை தயாராகவுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமை தாங்குகின்றார். அவர் நாளைய தினம் மாநாட்டில் உரையாற்றி, இக்குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிக்கவுள்ளார். அத்துடன் இலங்கை தொடர்பான அறிக்கையையும், அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.

அமைச்சருக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் இடம்பெறும். அமெரிக்கா நேற்று சமர்ப்பித்த யோசனை, இலங்கை தொடர்பான மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது பிரேரணையாகும்.

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரேரணை, எதிர்வரும் 26ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஏனைய பிரதிநிதிகள், அடுத்த சில நாட்களில், ஜெனீவா சென்றடையவுள்ளனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெனுகா செனவிரட்ன, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியும், தூதுவருமான ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக, வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் வரு­மாறு

1.ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை கடந்த பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் வெளி­யிட்ட அறிக்­கையை வர­வேற்­கின்றோம்.

2.இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­மிக்க சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். மேலும் தொடரும் மனித உரிமை மீறல்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் முன்­வைத்­துள்ள பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­த­வேண்டும்.

3.கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் நிறை­வேற்ற மேல­திக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதில் நீதிஇ சமத்­துவம், பொறுப்­புக்­கூறல் மற்றும் அனைத்து மக்­க­ளுக்­கு­மான நல்­லி­ணக்கம் உறு­தி­ப்ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

4.நாட்டில் மத ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். கோவில், பள்­ளி­வாசல் போன்­றவை மீது எதிர்­கா­லத்தில் தாக்­குதல் நடத்­தப்­ப­டாமல் தடுக்க நட­வ­டிக்கை வேண்டும்.

5.வெலி­வே­ரிய பகு­தியில் படை­யி­னரால் ஆயு­த­மற்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

6.வட மாகாண சபையும் வட மாகாண சபை முதல்­வரும் உரிய முறையில் இயங்­கு­வ­தற்கு இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய அதி­கா­ரங்­களும் வளங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

7.அக­தி­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யா­ளரை இலங்கை வர­வ­ழைத்­த­மையை வர­வேற்­கின்றோம். அத்­துடன் விசேட ஆணை­யா­ளர்­க­ளுடன் ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கின்றோம்.

8.இலங்­கையில் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அவ­சியம் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளையின் கோரிக்­கையை வர­வேற்­கின்றோம். தற்­போ­தைய பிரே­ரணை தொடர்பில் பேர­வையின் 27 ஆவது கூட்டத் தொடரில் வாய்­மூல விளக்­கமும் 28 ஆவது அமர்வில் முழு­மை­யான அறிக்­கையும் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும்.

9. இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசேட ஆலோ­ச­னையும் தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படவேண்டும்.

10. இலங்கையானது பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும்.


ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாடு, எதிர்வரும் 28ம் திகதி வரை நடைபெறும். இதில் 47 அங்கத்துவ நாடுகளின் அங்கத்தவர்கள், கலந்து கொள்ளவுள்ளனர்.

4 comments :

சுதன் ,  March 4, 2014 at 6:11 PM  


அமெரிக்க முன்வைத்துள்ள இந்த பிரேரணையை பார்க்கும் போது ஒரு உள்நாட்டின் விவகாரங்களின் தமது சில குறுகிய நோக்கங்களுக்காக அமரிக்கா மற்றும் பிரித்தானியா செயற்படுவதை தெள்ளத்தெளிவாக காட்டுகின்றது. மேற்குறித்த விடயங்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட அல்லது தீர்வுகாணப்பட வேண்டியவை என்பதை தெளிவாக அமெரிக்கா புரிந்துகொண்டும் அபிருத்தியை நோக்கிச் சொல்லும் இலங்கையின் அபிருத்தி திட்டங்களை குழப்ப நினைப்பது அமெரிக்காவின் இரட்டை வேடமாகும்

அமெரிக்காவும் பிரித்தானியாவும் செய்த செய்துகொண்டீருக்கு மனித உரிமை மிறல்களை யாரிடம் போய் சொல்லது ? அமெரிக்காவும் பிரித்தானியாவும் செய்த மனித உரிமை மீறல்களை னணக்கிடத்தான் முடியுமா? அமெரிக்காவும் பிரித்தானியாவும் தற்போது இலங்கை தொடர்பாக செய்வது ஒரு வகையான மனித உரிமை மீறல்களை என்பதை இந்த இரு நாடுகளும் புரிந்து கொள்ளவில்லையா?

Arya ,  March 4, 2014 at 7:59 PM  

ஏன் , இராக்கில் , ஆப்கானிஸ்தானில் , பாகிஸ்தானில் ( ஆளில்லா விமான தாக்குதலில்) கொல்லப் பட்டவர்கள் இவர்களின் கண்ணில் தெரியவில்லையா ? 380, 000 மேல் பணய கைதிகளாக புலிகளால் பிடித்து செல்ல பட்ட தமிழ் மக்களை இராணுவம் காப்பாற்றியது ஏன் இவர்களால் திட்ட மிட்டு மறைக்கப் படுகின்றது. இவர்களின் மிரட்டல் களுக்கு எக்காரணம் கொண்டும் அடி பணிய கூடாது.

Anonymous ,  March 5, 2014 at 5:02 AM  


Whatever is, World need big brothers to resolve the problems. Otherwise no one can control the dictators and the bad rulers.
If No USA and UNO, The world will full of mess.
We can't imagine the human lives.

Anonymous ,  March 5, 2014 at 4:31 PM  

America and England control themselves. Not any other Asian country. How many people killed by American and England forces in Afghanistan? Than what are the punishments have to give to those two countries??
Nothing war crime in srilanka at all. But the srilankan government saves the life of innocent Tamil people. That wht the srilankan government did.

Those counties very jealous about the development in Srilanka that is the reason they try to make conflict in srilanka and those countries doing everything for Tamil Diaspora’s money

Everyone know world is messed by those two country. American and England destroying the developing country, UN also helping to America and England to destroy other country

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com