Tuesday, March 4, 2014

பிம்ஸ்டெக் மூன்றாவது அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்தவின் உரை......!

உலகின் எங்கு எவ்வடிவத்தில் எவ்விதத்தில் விஸ்வரூபமெ டுத்த போதிலும், பயங்கரவாதம் சகல மக்களினதும் மொத்த பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாகுமென, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மியன்மாரில் நடைபெறும் பிம்ஸ்டெக் மூன்றாவது அரச தலைவர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் அமைப்பில் பங்களாதேஸ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென்கிழக்கு ஆசியாவின் 7 நாடுகள் அடங்கிய பிராந்திய கூட்டமைப்பாகும். முதலாவது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு, 2004ம் ஆண்டு தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்றதுடன், 2வது மாநாடு 2008ம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்றது. இம்முறை மாநாட்டுக்கு மியன்மார் குடியரசின் ஜனாதிபதி தெயின் செயின் இதற்கு தலைமை தாங்குகின்றார். இன்று முற்பகல் அவர் தலைமையில் மியன்மாரின் நே பி டோ வில் மாநாடு ஆரம்பமானது.

பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஆரம்பகால அங்கத்தவராக இலங்கை பிம்ஸ்டெக் செயற்பாடுகள் குறித்து, கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். முழு உலகிலும் பயங்கரவாதத்தினூடாக இடம்பெற்று வரும் குற்றச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், 2004ம் ஆண்டு முதல் பிம்ஸ்டெக் மாநாடு அதற்கு வழங்கிய ஆதரவை, ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

பயங்கரவாதம் இலங்கையிலிருந்து பூண்டோடு ஒழிக்கப்பட்டதையும் பயங்கரவாத அமைப்புகளின் சர்வதேச ரீதியிலான வலையமைப்புகள் குறித்தும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத பிரச்சினையை எடுத்துக்காட்டும்போது, பிம்ஸ்டெக் அமைப்பின் நாடுகளுக்கு மத்தியில் உள்ள அர்ப்பணிப்பு தொடர்ந்தும், இருக்க வேண்டுமென்றும், ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

3 தசாப்தகாலம் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு என்ற வகையில், இலங்கைக்கு மனித மற்றும் பொருளாதார அழிவுகள் குறித்த சிறந்த தெளிவு இருப்பதாகவும், அவர் கூறினார். துரதிஸ்டவசமாக அக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் உரிய இலக்கை எட்டவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியதன் பின்னர், இலங்கை 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பிம்ஸ்டெக் செயற்பாடுகளுக்காக இலங்கை தனது முழு அளவிலான ஆதரவை வழங்குமென்பதை உறுதியாக தெரிவிப்பதுடன், அதன் மூன்றாவது மாநாடு வெற்றிகரமாக அமையட்டும் என்றும், ஜனாதிபதி பிரார்த்தித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com