Thursday, March 27, 2014

படையெடுக்கும் பாம்புகள்... குறிஞ்சாக்கேணியில் பதற்றத்துடன் குவியும் மக்கள்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் பாம்புகளை ஒத்த அரியவகையான உயிரினங்கள் மீண்டும் புதன்கிழமை (26) படையெடுத்துள்ளன. கிண்ணியா பிரதேசத்தின் காக்காமுனை, குட்டிக்கராச் குறிஞ்சாக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆற்றிலேயே இவ்வகையான உயிரினங்கள் படையெடுத்துள்ளன.

இது இவ்வாறிருக்க, கிண்ணியா பிரதேச காக்காமுனை, அரை ஏக்கர் பகுதியிலுள்ள வாவியொன்றிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் பாம்பு போன்ற அரியவகையான உயிரினம் படையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அரியவகை உயிரினம் மீண்டும் படையெடுத்துள்ளதால் இயற்கை அனர்த்தம் ஏற்படுதவற்கான சமிக்ஞையாக இருக்கலாமென்று கிராமவாசிகள் நம்புகின்றனர். இதனால் கிராமவாசிகள் இது தொடர்பில் அச்சமடைந்துள்ளதுடன் அப் பாம்பு வகைகளை பார்ப்பதற்காக குறிஞ்சாக்கேணிப் பகுதியில் மக்கள் திரண்டு செல்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com