Monday, March 17, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளுக்கு எதிராக துரிகதியில் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி

பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் விளக்கமளித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும், இக்கூட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா பிரேரணை தொடர்பாக நாட்டுக்கு ஏற்படப்போகும் தாக்கங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர். ஒருசில அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பாக ஜெனீவா அறிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளனர்.

“இந்த விடயங்கள் சம்பந்தமாக பொலிஸ்மா அதிபர் புலனாய்வுத்துறையினரின் அறிக்கையை பெற்றிருக்கின்றேன். மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றேன்” என ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளததாக அங்கிருந்த முக்கியஸ்தர் ஒருவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குறிப்பாக சில அமைச்சர்கள் முஸ்லிம்கள் நாட்டுக்கு பாதகம் வரும்வகையில் ஜெனீவாவுக்கு இந்த பிரச்சினையை கொண்டு போயுள்ளனர் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இதனை இத்துடன் முடித்துக்கொண்டு இதனை பெரிதுபடுத்தாமல் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக பேசவேண்டாம் என அறிவுரை கூறினார் ஜனாதிபதி.

அதேநேரம் குறுக்கிட்ட பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ குறிப்பாக கிழக்குமாகாணத்தில் கல்முனைப் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிவாசல்கள் இணைந்து ஜனாதிபதிக்கு ஆதரவாகவும், ஜெனீவா பிரேரணைக்கு எதிராகவும் பாரியளவில் பேரணி நடாத்தியுள்ளனர். எனவே இவ்விடயம் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் விடயத்தில் ஒரு சாதகமான விடயமாகும் என தெரிவித்துள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி அவர்கள் கல்முனை மக்கள் செய்த விடயம் எனக்கு உற்சாகத்தைத் தருகின்றது. அதற்கு நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன். எனவும் அங்கு தெரிவித்துள்ளார்.

(முஹமட் இஷ்ராக்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com