Monday, March 10, 2014

வீசா வழங்கும் நடைமுறைகளில் சில மாற்றங்கள்!

இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பில் வீசா வழங்கும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் நாட்டுக்குள் பிரவேசித்த 1.2 மில்லியன் வெளிநாட்டவர்களில் 300,000 பேர் சுற்றுலாப் பயணிகள் அல்ல என தெரிவித்தள்ள குடிவரவு திணைக்களம் தற்போது வழங்கப்பட்டு வரும் வீசா வகையீடுகளின் காரணமாக இவர்கள் சுற்றுலாப் பயணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது எனவே எதிர்காலத்தில் இந்த நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

மேலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்வோர் வர்த்தகர் நடவடிக்கைகளிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே இவர்களை சுற்றுலாப் பயணிகளாக கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையிலேயே நாட்டின் சுற்றுலாப் பயணிகள் பற்றிய தகவல்களை இலங்கை சுற்றுலா சபை வெளியிட்டு வருகின்றது என தெரிவித்துள்ளதுடன் இனி வரும் காலத்தில் மெய்யான சுற்றுலாப் பயணிகளை அறிந்து கொள்ளும் வகையில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com