Monday, March 10, 2014

தமிழினத்தின் காவலர்கள் என தமிழ் இளைஞர்களை துண்டுபிரசுரம் ஒட்ட வைத்தவர் சுவிஸில் உள்ள புலி உறுப்பினர் சந்தோஸ்: ரி.ஐ.டி விசாரணையில் புதிய தகவல்

கடந்த வாரம் தமிழ் இனத்தின் காவலர்கள் என்னும் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டிய இரு இளைஞர்கள் இத்தாவில் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் ஆயுதம் ஏந்தத் தூண்டும் வாசகங்களையும் மீண்டும் தமிழ் இனத்தின் காவலர்கள் வருவார்கள் என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளையும் வைத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இவ் இருவரையும் விசாரணை செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களிடம் பெற்பட்ட தொலைபேசி அழைப்புக்களை வைத்து யாழ் ஏழாலைப் பகுதியில் மேலும் ஒரு இளைஞரை கைது செய்தனர். இவர்கள் மூவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த இளைஞர்களை வன்னியில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இயக்கியதாகவும் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. இது தவிர இம் மூன்று இளைஞர்களுடனும் சுவிஸ் நாட்டில் இருந்து சந்தோஸ் என்பவர் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவரே இச் சுவரொட்டிகளை ஒட்டுமாறு பணித்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் குறித்த தொகை பணம் ஆனது அவர்களது வங்கிக் கணக்குக்கு சந்தோசால் போட்ப்பட்டதாகவும் அதன் பின்னரே குறித்த இளைஞர்கள் சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் தெரியவருகிறது.

சந்தோஸ் என்பவர் முன்னாள் புலி உறுப்பினர் என்பதுடன் தற்போது சுவிஸ்சிர் வசித்து வருவதாகவும் இவர் புலம் பெயர் மக்களிடம் நிதியைத் திரட்டும் நோக்குடன் இலங்கையில் மீண்டும் பதற்ற நிலையை உருவாக்க முனைந்துள்ளதாக தெரியவருகிறது.

இவரது இச் செயற்பாட்டினால் ஒன்றும் அறியாத மூன்று குடும்பஸ்தர்கள் பணத்திற்காக சென்று தற்போது தடுப்புக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  March 10, 2014 at 8:33 AM  

Very good for 3 gays.

What happaning with Santhos?? What Sri Lankan Misson in Swiaa, will do on this terrorist matter with Swiss government?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com