Tuesday, March 18, 2014

காணாமல் போன விமனத்தை தேட இலங்கையின் வான் பரப்பைப் பயன்படுத்த நான்கு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி!

காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளுக்காக இலங்கையின் வான் பரப்பைப் பயன்படுத்த நான்கு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் வேண்டுகோளு க்கு இணங்கவே இலங்கை அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மலேசியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை வான் பரப்பிற்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விமானத்திலிருந்து இறுதியாக வெளியான தகவல் உதவி விமானியால் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இதேவேளை, தமது உறவுகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமற்போயுள்ள விமானத்தில் இருந்த சீனர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமது உறவினர்கள் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுமாறு அவர்கள் மலேசிய அரசாங்கத்தைக் கோரியுள்ளனர்.

விமானம் காணாமற்போய் 10 நாட்களைக் கடந்த நிலையில் அதில் இருந்த சீனர்களின் உறவினர்கள் தகவல்களை எதிர்பார்த்து பீஜிங் ஹோட்டலில் காத்திருக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com