Sunday, March 9, 2014

மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற அஸ்ஸபா விளையாட்டுப் போட்டி

வெலிகம, மதுராப்புர அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகள் சென்ற 05, 06 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

06 ஆம் திகதி பரிசளிப்பு நிகழ்வு வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். இர்பான் தலைமையில் நடைபெற்றது. விசேட அதிதியாக நஜீப் ஹாஜியார் கல்வி நிறுவனத்தின் ஆயுட்காலத் தலைவர் அல்ஹாஜ் நஜீப் அமீர் ஆலிம், அவரது புதல்வி ஆகியோர் கலந்துகொண்ட அந்நிகழ்வில், வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் சத்தார் உட்பட விசேட, பிரதம அதிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கொட்டும் மழைக்கு மத்தியில் மாணவர்களின் விநோத உடைப் போட்டி, மாணவியரின் உடற்பயிற்சிக் கண்காட்சி என்பன பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

(கேஎப் - படங்கள் : Mohamed Faris)


























0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com