Thursday, March 6, 2014

பற்றிமா தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாண ஆளுநர் - U.M.இஸாக்

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வியாழக் கிழமை (06) கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியு தலைமையில் கல்லூரிமைதானத்தில் சிறப்பாக நடை பெற்று முடிந்தது.

இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாகவும் , கௌரவ அதிதியாகவும் ,சிறப்பு அதிதிகளாகவும் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார , கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ .ஏ.நிஸாம் ,கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் ,சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் ,முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் உட்பட பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் , அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் .

நடை பெற்று முடிந்த விளையாட்டுப் போட்டியில் 392 புள்ளிகளைப் பெற்று மேபிள் இல்லம் முதலாவது இடத்தையும் ,374 புள்ளிகளைப் பெற்று இமானுவல் இல்லம் இரண்டாவது இடத்தையும் ,356 புள்ளிகளைப் பெற்று மத்தியு இல்லம் மூன்றாவது இடத்தையும் ,278 புள்ளிகளைப் பெற்று டொறதியா இல்லம் நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன .

முதல் மூன்று இடங்களுக்குமான வெற்றிக் கேடயங்களை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்குமாகான ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம வழங்கி வைத்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com