கோவில்குளம் சிறுவர் இல்லத்தில் இருந்து சென்ற சிறுமிக்கு முத்தம் கொடுத்தவர் மாட்டினார்
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுமிக்கு முத்தமிட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நான்கு சிறுமிகள் எவருக்கும் தெரியாமல் தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்கள் திருகோணமலைக்கு செல்வதற்காக சென்றபோதிலும் குடாகச்சக்கொடி கிராமத்தில் உள்ள வீடொன்றில் தண்ணீர் கேட்டபோதிலும் அங்கிருந்தவர்கள் சிங்களவர். தமிழ் தெரியாத நிலையில் அயலில் உள்ள தமிழ் தெரிந்த ஒருவரை அழைத்து விசாரித்துள்ளனர்.
இந் நிலையில் இரவுநேரம் என்பதனால் அவர்களை தம்முடைய வீட்டில் தங்குமாறும் காலையில் செல்லுமாறும் கூறி தமிழ் தெரிந்த தந்த நபர் அழைத்து சென்றுள்ளார்.
சிறுமிகளும் அவருடைய வீட்டில் இரவு தங்கியிருந்து காலையில் செல்லவதற்கு ஆயத்தமான நிலையில் தமிழ் தெரிந்த நபரான துமிந்த கமல் சுரவீர என்பவர் ஒரு சிறுமியை தனியான இடத்தில் வைத்து முத்தமிட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி சிறுமிகளை சம்பந்தப்பட்ட நபர் வேறொருவர் ஊடாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைதுள்ள நிலையில் அவர்கள் சிறுமிகள் மீது மேற்கெண்ட விசாரணையில் நடந்தவற்றை கூறியதை அடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நபரை சந்தேகத்தின் பேரில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் வவுனியா நீதிமன்றத்தில் அந் நபரை ஆஜர்ப்படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை தனக்கு முத்தமிட்டதாக தெரிவித்த சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூன்று சிறுமிகளும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment