Tuesday, March 18, 2014

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்துவதற்கு சட்டரீதியான வாய்ப்புக்கள் இல்லை!

ஜெனீவா மனித உரிமைபேரவையில் இலங்கைக்கு எதிராக ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தர்மம் அல்ல. இது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சட்டரீதியிலான வாய்ப்புக்கள் இல்லையென அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு எமது பதில் எனும் தொனிப்பொருளில் மகாவெலி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளில் அடிக்கடி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நவநீதம்பிள்ளையால் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை விசாரிக்கும் பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்படவுள்ளது. இவ்வாறு விசாரிக்கப்பட்டு அவரது அறிக்கை 2015 மே மாதம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

யுத்தம் முடிவடைந்து இரண்டே வாரங்களில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று தேவையென்று தெரிவித்தார். அவ்வாறு கோரிக்கை வைப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் அக்கோரிக்கையை அவர் முன்வைத்தார். ஆனால் விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்படவுள்ளது. இவ்வாறு விசாரணை நடத்துவது மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகரின் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல. அவ்வாறு செய்வதற்கான சட்ட அதிகாரமும் அவருக்கு இல்லை.

தேசிய புத்திஜீவிகள் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இம்மாநாட்டில் பல்வேறு சமய தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com