Monday, March 24, 2014

மனோகணேசனை தோற்கடிக்க கூட்டமைப்பு டீல்: வாயைப் பொத்துமாறு சம்மந்தன் கூட்டமைப்புக்கு ஓடர்! சித்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாணத்தில் மனோகணேசன் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கு வதாக வெளியான பத்திரிகைச் செய்திகளை அதன் தலைவர் இரா. சம்பந்தன் முற்றாக மறுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

அதனால் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பாவித்து பத்திரிகைகளுக்கு இத்தகைய அறிக்கைகளை விட வேண்டாமென சம்பந்தன் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நம்பகரமாகத் தெரிய வந்துள்ளது.

கொழும்பு அரசியல் வேறு, வடக்கு கிழக்கு அரசியல் வேறு எனத் தெரிவித்திருக்கும் சம்பந்தன் தமது கட்சிக்கு கொழும்பில் அரசியல் செய்யும் நோக்கம் தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள கூட்டுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எவராவது யாருக்காவது ஆதரவு தெரிவிக்க விரும்பினால் தத்தமது கட்சியின் பெயரையும் தமது பெயரையும் பாவித்துச் செயற்படுமாறும் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளாராம்.

கடந்த வாரம் ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஆலயமொன்றில் பூசை வழிபாடுகளில் கலந்துகொண்ட புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சம்பந்தன், தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட முறையிலேயே அதில் கலந்துகொண்டதாகவும் கட்சி அவர்களை அனுப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பொது வைபவமொன்றில் சந்தித்த சம்பந்தன், கொழும்பில் தமது கட்சி எவருக்கும் ஆதரவு வழங்குவதாக உறுதியளிக்கவில்லை என உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவைசேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப்), பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எப்) ஆகியோர் மனோகணேசனுக்கு ஆதரவு வழங்குவதாக பத்திரிகைகளில் தெரிவித்திருந்தனர். இவர்களை கூட்டமைப்பு என்ற கட்சிப் பெயரை பயன்படுத்த வேண்டாம் என இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இரா.சம்மந்தன், சுமந்திரன் ஆகியோர் அரசுடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன்படி சம்மந்தன், விக்கி, சுமந்திரன் ஆகியோர் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலேயே மனோவை ஆதரிப்பது இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மனோகணேசனை ஆதரிக்காது மௌனம் காப்பதன் மூலம் தலைநகர தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அரசுக்கு வாக்களிப்பார்கள் அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் எனக் கருதியே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் அரசிடமும் ஐக்கிய தேசியக் கட்சியிடமும் பெரும் தொகை பணத்தை பேரம் பேசி கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது. வீரவசனம் பேசி மக்களை ஏமாற்றும் மற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்ன செய்யப் போகிறார்கள் பணத்தில் பங்கு கேட்கப் போகிறார்களா? அல்லது மனோகணேசனுக்கு கூட்டமைப்பு புதிய அணியை உருவாக்க போகிறதா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com