Friday, March 7, 2014

அமெரிக்காவின் பிரேரணைக்கு நன்றி தெரிவித்தார் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய !

ஐக்கிய அமெரிக்க செனட் அறிமுகஞ்செய்த பிரேரணை 364 க்கு தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.உள்நாட்டு யுத்தத்தை 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நாட்டில் ஜனநாயகத்தை மீளளித்தல்- புனர்நிர்மானம் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் இலங்கை அடைந்துள்ள வெற்றியை இனங்கண்டு இப்பிரேரணை அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்

தூதுவர் செனட்டர்களுக்கு அனுப்பிய அக்கடிதத்தில்- அந்த பிரேரணையானது அமெரிக்க மக்களின் சிரேஷ்ட அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கை பற்றி கொண்டுள்ள நல்;லபிப்பிராயத்தையும் புரிந்துணர்வையும் எடுத்துக்காட்டுகிறது. நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சமாதானம்- ஜனநாயக மீளளிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான திடமான நடவடிக்கைகள் யாவும் இலங்கையின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதாக அந்த பிரேரணையில் சுட்டிக்காட்டிள்ளமை மகிழ்ச்சிக்குறிய விடயம் என அவர் தெரிவித்தார்.

இந்த பிரேரணையானது மிகவும் சமநிலைப்படுத்தப்பட்டதும் - நீதியானதுமாகும். இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாக இப்பிரேரணை விளங்குகிறது.ஐக்கிய அமெரிக்க செனட்டர்கள் இலங்கை சம்பந்தமாக மேற்கொண்ட இந் த சார்பு பிரேரணையானது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு மானசீக உந்துதலாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ககற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவியதும் மற்றும் அது மேற்கொண்டு வரும் பலதரப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளமை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்தார் .

இந்த பிரேரணையானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க - இலங்கை உறவை மேலும் இப்பிரேரணை வலுப்படுத்தும் என்பது எனது நம்பிக்கை. இலங்கையை பற்றிய உண்மையான தகவல்களை தமது பிரதிநிதிகளுக்கு வழங்கியதற்கு அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு நான் நன்றிக்கூற கடமைப்பட்டுள்தாகவும் அவர்களது விடாமுயற்சியின் பிரதிபலனாகவே செனட் பிரேரணை 364 அறிமுகம் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு தொடர்ந்தும் தற்போதைய அபிவிருத்திகள் பற்றி விளக்கமளிக்கும்படியும் அவர்களை இலங்கைக்கு வந்து நேரடியாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பார்வையிடும்படி கோரும் வண்ணம் அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களை அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com