Sunday, March 16, 2014

புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளினால் வன்னியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

வன்னிப் பகுதியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி சமாதானத்தை சீர்குலைக்க புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் முயற்சிப்பதாக தெரியவருகிறது.

இதனடிப்படையிலேயே புலம்பெயர் நாடொன்றில் உள்ள புலியால் போராட்டத்தை தூண்டும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்வதற்காக பணம் அனுப்பப்பட்டது.

இப் புலிகளுடன் இணைந்து மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த முனைந்த இருவர் முதல் கட்டமாக இத்தாவில் பகுதியில் வைத்து கைது செய்யப்படனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருந்து ஏழாலையில் இருந்து ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர்களை இயக்கிய பொன்னையா கஜீபன் (கோபி) மற்றும் அப்பன் ஆகிய இருவரும் தலைமறைவாகியுளன்ளனர். இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோபியின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். மீண்டும் நாட்டை பிளவுபடுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயலும் இவர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  March 16, 2014 at 9:51 PM  

MP Sritharan in Kilinochchi, Ananthy Sasitharan, Mavai Senathirajah,Sivasakthi Aananthan and Kuthirai KAJENDRAN have all info regarding diaspora LTTE TERRORISTS.

See This one, what thay do,

[Photo] Photo
தமிழர்களுக்கெதிரான அநீதிகள்! உண்மைகளைக் கண்டறிய சர்வதேச பொறிமுறை வேண்டுமென கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2014, 01:46.05 PM GMT ]
தமிழர் தாயகத்தில் நடைபெற்ற அநீதிகளை மறைப்பதற்காக சாட்சிகளை அழிப்பதற்கும், சாட்சிகளை மௌனிக்கச் செய்வதற்கும் சிறீலங்கா அரசாங்கம் முயற்சித்துவரும் நிலையில் சாட்சிகளை பாதுகாப்பதன் மூலம் உண்மைகளை கண்டவதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்றினை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் உருவாக்க வேண்டும்.

உருவாக்கப்படாவிட்டால் ஜெயக்குமாரி போன்ற காணாமல்போனவர்கள் தொடர்பான சாட்சிகள் பல அழிக்கப்படும். அல்லது மௌனிக்கச் செய்யப்படும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்டத்தில் நேற்றய தினம் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ம் திகதி கிளிநொச்சி- கண்டாவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜெயக்குமாரியின் விடுதலையினை வலியுறுத்தி வவுனியா நகரில் சுமார் 2 மணி நேரம் மேற்படிக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி கோரிக்கை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சகல தரப்பினராலும் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படிக் கோரிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

ஜெயக்குமாரி செய்திருக்கும் தவறு தன்னுடைய இரு பிள்ளைகளை போரில் பலி கொடுத்துவிட்டு, காணாமல்போன தன் பிள்ளையை தேடி அலைந்தமை மட்டுமே. அதற்காகவே அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வாறான மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளவேண்டாம் எங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் நிச்சயமாக எமக்கு வழங்கவேண்டும் என, தொடர்ச்சியாக தன்னுடைய மகள் விபூசிகாவுடன் இணைந்து குரல் கொடுத்துவந்தவர் ஜெயக்குமாரி.

இந்த நிலையில் அவரை மௌனிக்கச் செய்வதன் ஊடாக காணாமல்போனவர்கள் அனைவருக்கும் மரணச் சான்றிதழ்களை வழங்கி விடலாம் என அரசாங்கம் கனவு காண்கின்றது.

இந்நிலையில் சாட்சிகளை பாதுகாப்பதற்கான பொறுப்பு,போரின்போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க சர்வதேச நாடுகளுக்கும் இருக்கின்றது. அந்தவகையில் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஒரு இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்பட வேண்டும். அதன் ஊடாக மட்டுமே சாட்சிகளை பாதுகாப்பதற்கும், உண்மைகளை கண்டறிவதற்கும் முடியும் என்றார்.

இங்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா குறிப்பிடுகையில்,

சிறிலங்கா அரசாங்கத்தின் அடாவடிகள் அன்று தொட்டு இன்றுவரையில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. பெற்ற மகனை தேடியதற்காக, தன் உடன் பிறந்த சகோதரனை தேடியதற்காக தாய்க்கும் மகளுக்கும் இன்றைக்கு இந்த அநீதி நடந்துள்ளது.

காணாமல்போனவர்கள் தொடர்பான எவ்விதமான தகவல்களையும் அரசாங்கம் இன்றுவரையில் வெளியிடவில்லை. இந்நிலையில் அதனைக் கேட்பதும் தவறு என்ற அடிப்படையிலேயே ஜெயக்குமாரியும் அவருடைய மகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் சர்வதேசம் இந்தவிடயத்தில் சரியான முடிவினை எடுக்கும் வகையில், உள்நாட்டில் கட்சி பேதங்கள், அமைப்பு பேதங்கள் கடந்த ஜனநாயக வழியிலான வலுவான தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிடுகையில்,

ஜெயக்குமாரியின் விடுதலைக்காக சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவினை வழங்க வேண்டும். காணாமல்போன தன் பிள்ளையை தேடியதற்காக அவர் விட்ட கண்ணீர் மிகப்பெரும் சாட்சியாக மாறியிருக்கும் நிலையில் நடைபெறும்.

ஜெனிவா கூட்டத்தொடரில் அவர்கள் சாட்சியளிக்க கூடாது, என்பதற்காகவே இந்த அநீதி நடந்திருக்கின்றது. அவருடைய கைது தொடர்பாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

சர்வதேச சமுகம் இலங்கைக்கு எதிராக திரும்பியிருக்கும் நிலையில் புலிகள் இன்னமும் இருக்கின்றார்கள். அவர்க ளிடம் ஆயதங்கள் இருக்கின்றன என காண்பிப்பதற்கும், ஜெயக்குமாரி போன்ற சாட்சிகளை அழிப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்நிலையில் சர்வதேசம் இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமாரி போன்றே பாதிக்கப்பட்ட பலர் இங்கே இருக்கின்றார்கள். அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com