Sunday, March 16, 2014

தேர்தலில் ஈடுபட பணம் படைத்திருக்க வேண்டும்! - கீதா

தென் மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் இராணுவத்தினருக்கும் இழுக்கே என பெந்தர எல்பிட்டிய ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி அமைப்பாளர் கீதா குமாரசிங்க தெரிவிக்கிறார்.

“பிறப்பிலிருந்தே சட்டத்தை மீறுகின்றன, அடாவடித்தனங்கள் புரிகின்ற, பெண்களை போகப் பொருளாகப் பயன்படுத்துகின்ற அஜித் பிரசன்னவுக்கு, தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவது சாதாரணை விடயம். பழக்கம் பெரிதா? வழக்கம் பெரிதா?

கார் அனுமதிப் பத்திரத்தை விற்று பஸ்தோறும் ஏறி வாக்குப் பிச்சை சாப்பிடுகிறார். அரசியல் செய்வதாயின் பணம் தேவை. அவ்வாறு பணம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு பணம் தேடுவதிலேயே மும்முரமாக ஈடுபடும் “பணி”யையே செய்கின்றனர்.

தேர்தல் முன்மொழிவு வழங்கும் நாளில் இராணுவ ஆடையொன்றை அணிந்து வந்தார். இராணுவத்தினருக்கும் இது இழுக்கு.

நான் இன்றுவரை தேர்தல் சட்டங்களை மீறவில்லை. நாங்கள் அதற்குப் பயப்படுகிறோம், தலை வணங்குகிறோம். இந்நாட்டிலுள்ள மக்கள் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும்போது, இப்படிப்பட்டவர்களையா தெரிவு செய்வது? எனச் சிந்திக்க வேண்டும்” எனவும் அவர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com