Wednesday, March 19, 2014

அதிக தேர்தல்களில் தோற்றவர் சோமவங்ச...(?)

வரலாற்றில் தேர்தல்களில் அதிகம் தோற்றவர் சோமவங்ச என பதவாகும் என்ற பயத்திலேயே ஜேவிபி தலைமைத்துவத்திலிருந்து நீங்கினார் சோமவங்ச என்கிறார் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி.

காலியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

“சோமவங்ச அமரசிங்க ஜேவிபியின் தலைமைத்துவத்திலிருந்து விலகியதன் காரணம் என்ன தெரியுமா? அதிகம் தோற்கின்ற கட்சித் தலைவர் என அவரது பெயர் வரலாற்றில் பதிவாகும் என்ற பயத்தினால்தான். தற்போதைக்கு இந்த வரலாற்று பெருமைக்குரியவராக இருப்பவர் நமது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. இம்முறை தோல்வியைத் தழுவினாலும் அது அவருக்கு இழுக்கினைச் சேர்க்காது. தலைமைத்துவ சபையையே அது சாரும்.

ரணிலுக்குப் பிறகு பட்டியலில் முதலில் நின்றவர் சோமவங்ச. இம்முறை இது தன்னை வந்தடையும் என்பதை அவர் நன்குணர்ந்தார். அவ்வாறானால் ஐதேகவும் ஐமமுவும் இணைந்து தன்னைச் சாத்துவார்கள் என்பது அவருக்கு விளங்கியது. அதற்கு முன் நானாக விலகிக் கொள்வதுதான் சிறந்தது எனத் தீர்மானித்தார் அவர். அதனால்தான் அவர் அந்தத் தீர்மானத்தை எடுத்து விலகினார். தற்போது அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

இளைஞர்களில் ஒருவர் தலைமைத்துவத்தை ஏற்பதே சிறந்தது. அதனாற்றான் தலைமைத்தை மாற்றினேன். அவ்வாறு ஏனைய கட்சிகளும் இளையவர்களுக்கு முன்னிலை வழங்க வேண்டுமாம். அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அவரது விகடப் பேச்சுக்கு முடிவில்லை போலும்…”

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com