Tuesday, March 11, 2014

தேசிய ஒளடதக் வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு!

தேசிய ஒளடதக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குரிய சட்டத்தின் இறுதி வரைவு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அலரி மாளிகையில் வைத்து நேற்று(10.03.2014) கையளிக்கப்பட்டது.

பேராசிரியர் சேனக பிபிலே தயாரித்த மருந்து பொருள் கொள்கையே தேசிய மருந்துப் பொருள் கொள்கையாக அறிவிக்கப்படவிருக்கின்றது.

கடந்த 40 வருடங்களாக இந்த மருந்து பொருள் கொள்கை பேசுபொருளாகவே இருந்தது என்றாலும் அக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மஹிந்த சிந்தனைக் கொள்கைப் பிரகடனத்தில் அறிவித்துள்ள அந்த உறுதி மொழிக்கு ஏற்ப அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துப் பொருள் கொள்கையுடன் தொடர்பான இச்சட்ட வரைவை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அதனைத் துரிதமாக நடை முறைப் படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியதுடன் தேசிய மருந்து பொருள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சுயாதீன நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டுவதனூடாக மருந்து பொருள் கம்பனிகளின் பதிவை ஒழுங்கமைத்தல், குணவியல்புடன் கூடிய உயர் தரம் மிக்க மருந்து பொருள் பாவனை என்பன எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்மருந்து பொருள் கொள்கை நடைமுறைக்கு வந்ததும் இந்நாட்டின் மருந்து பொருள்துறையில் நடைபெறுகின்ற ஊழல், மோசடிகளைத்தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com