Monday, March 10, 2014

கருவிலிருந்து வெளியேறியதும் இணையத்தில் உலாவரும் குழந்தை; பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சி விளம்பரம் !! ( வீடியோ)

குழந்தை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளீர்களா? அவதா னமாக இருங்கள். உங்கள் குழந்தை கருவிலிருந்து வெளி யேறும் போதே பேஸ்புக்கில் ஹாய் சொல்லிக்கொண்டு பிறந் தாலும் ஆச்சரியமில்லை. 'இணையத்துக்காக பிறப்பு' என்ற தொனிப்பொருளில் அண்மையில் வீடியோ விளம்பரம் ஒன்று வெளியாகி இணையத்தில் வேகமாக பரவியுள்ளது.

தாயின் கருவிலிருந்து வெளியேறும் குழந்தை ஒன்று அவசர அவசரமாக வெளியே வந்து அருகிலுள்ள தந்தையின் கையிலிருக்கும் டெப்லட்டை வாங்கி தொப்புள் கொடியை எப்படி வெட்டுவது என கூகுள் மூலம் அறிந்து கொள்கிறது. பின்னர் வைத்தியரிடம் கத்தரிக்கோலை பறித்து தொப்புள் கொடியை அறுத்துவிட்டு பெற்றோருக்கும் வைத்தியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அங்கிருந்து இணையத்துடன் உதவியுடனேயே தனது உலகை வரவேற்க தனியாக வைத்தியசாலையைவிட்டு வெளியேறுகிறது அக்குழந்தை.

வேடிக்கையாகவும் இணையத்தின் ஆதிக்கத்தையும் அத்தனை அழகாகக் காட்டியிருக்கும் இணையம் தொடர்பான நிறுவனமொன்றின் இந்த வீடியோ விளம்பரம் இணையத்தில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. வீடியோவில் வரும் குழந்தை தற்போது பிரபல்யமாகவுள்ள ஷெல்பி படம் எடுப்பதிலிருந்து யூடியூப், ஸ்ரீமிங், டெப்லட், கணனி, இன்ஸ்டாகிராம், கூகுள், ஜீ.பி.எஸ் என பல தொழில்நுட்பத்தினையும் பயன்படுத்தி அசத்துகிறது.

முடியாது என்ற பல விடயங்கள் கடந்த 10 வருடங்களில் நடந்துவிட்டது. எனவே இந்த இணையக் குழந்தையும் எதிர்காலத்தில் நடக்கலாம். எதற்கும் தயாராகவே இருப்போம் என இந்த வீடியோ விளம்பரம் மீதான தங்களது பார்வையை பலரும் வேடிக்கையாக பகிர்ந்துவருகின்றனர்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com