கலியாணம் காட்டுறன் எனக் கூறி 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் வசமாக மாட்டினார்

சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் அவரைத் திருமணம் செய்வதாக கூறி அவருடன் உறவுகொண்டுள்ளார். இதன் காரணமாக குறித்த சிறுமி கருவுற்றுள்ளார்.
சிறுமியொருவர் கர்ப்பிணியாக இருப்பது தொடர்பில் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரிகளின் கவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அதிகாரிகள் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனைடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து வாக்குமூலத்தை பெற்றதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்தும் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர்.
அதன்பின்னர் பொலிஸார் சந்தேகநபரை கடந்த சனிக்கிழமை (2) பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் . இதனையடுத்தே சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆத் திகதி வரையிலும் விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment