Saturday, February 8, 2014

போரின் போது பெற்றோரை பிரிந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த சிறார்கள் பெற்றோர்களிடம் மீளவும் ஒப்படைப்பு!

இறுதிப் போரின் போது பெற்றோரை பிரிந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த சிறார்கள் மூவர் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளால் தரவுகள் பெறப்பட்டு அடையாளம் காணப்பட்ட நிலையில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியினால் அவரது அலுவலகத்தில் வைத்து இன்று பெற்றோர்களிடம் மீளவும் கையளிக்கப்பட்டனர்.


கடந்த போரின் போது 700க்கும் மேற்பட்ட சிறுவர்களைக் காணவில்லை எனத் தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் இதில் 56 பேர் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

இவர்களில் மூவரின் பெற்றோர் சரியாக இனங்காணப்பட்ட நிலையில் பெற்றோர்களிடம் மீண்டும் இணைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளுக்கான உதவிகளை வழங்கியதுடன் தொடர்ந்தும் இவர்களுக்க உதவிகள் வழங்குவதாக வட மாகாண ஆளுநர் உறுதியளித்திருப்பதாக தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com