Thursday, February 13, 2014

இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார்! இறுதிக் கிரியைகள் நாளை!

இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

1946 மே மாதம் 19ம் திகதி இலங்கையின் மட்டக்களப்பு – அமிர்தகழியில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்த அவர். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்றார். அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ´செம்மீன்´ படப்புகழ் ராமு காரியத் அவரது ´நெல்லு´ (1974) படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார்.

1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ´கோகிலா´வை கன்னட மொழியில் இயக்கினார். ´மூன்றாம் பிறை’, ´அழியாத கோலங்கள்´, ´வீடு´, ‘சதி லீலாவதி’ என தமிழ் சினிமா இரசிகர்களால் மறக்க முடியாத பல படங்களை இயக்கினார்.

பாலு மகேந்திரா (74). கடந்த சில வருடங்களாக அவருக்கு இருதய நோய் பாதிப்பு இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். சினிமாவிலும் தொடர்ந்து தனது பணிகளை கவனித்து வந்தார். சமீபத்தில் அவர் தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது வென்றவர் பாலு மகேந்திரா. தேசிய விருது மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றிருக்கிறார்.

டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை 11.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது சினிமா பட்டறை ஸ்டூடியோவுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

நாளை இறுதி சடங்கு நடக்கிறது.

பாலுமகேந்திரா இயக்கிய படங்கள் :

கோகிலா
அழியாத கோலங்கள்
மூடுபனி
மஞ்சு மூடல் மஞ்சு
ஓலங்கள்
நீரக்ஷ்னா
சத்மா
ஊமை குயில்
மூன்றாம் பிறை
நீங்கள் கேட்டவை
உன் கண்ணில் நீர் வழிந்தால்
யாத்ரா
ரெண்டு தொகல திட்ட
இரட்டை வால் குருவி
வீடு
சந்தியாராகம்
வண்ண வண்ண பூக்கள்
பூந்தேன் அருவி சுவன்னு
சக்ர வியூகம்
மறுபடியும்
சதிலீலாவதி
அவுர் ஏக் ப்ரேம் கஹானி
ராமன் அப்துல்லா
ஜூலி கணபதி
அது ஒரு கனாக்காலம்
தலைமுறைகள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com