Wednesday, February 12, 2014

திருமணமாகி ஒரே வாரத்தில் சாதனைக்காக பலியானார் மனைவி!

அமெரிக்காவில் உள்ள தம்பதியினர் மலையில் இருந்து குதிக்கும் சாதனை செய்ய முயற்சிக்கையில் எதிர்பாராதவிதமாக பாராசூட் பழுதானதால், கணவர் கண்முன்னே கீழே விழுந்து அவருடைய இளம் மனைவி பரிதாபமாக பலியானார்.

அமெரிக்காவின் கடந்த சனிக்கிழமை Zion National Park in Utah என்ற பகுதியில் 28 வயது இளம்பெண் Amber Marie Bellows, என்பவர் தனது கணவர் Clayton Butler உடன் 2000 அடி உயரமான மலையில் இருந்து குதித்து சாதனை செய்ய தயாரானார். கணவன், மனைவி இருவரும் ஒருவர் பின் ஒருவராக குதித்து சாதனை செய்ய இருந்தனர்.

முதலில் Amber Marie Bellows, குதித்தார். அவர் குதித்த சில வினாடிகள் கழித்து அவருடைய கணவர் Amber Marie Bellows குதித்தார். இதில் Amber Marie Bellows, அணிந்திருந்த பாராசூட் திடீரென பழுதாகியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார். இதை அவருடைய கணவர் சில அடி தூரத்தில் இருந்து பார்த்தாலும், அவரால் காப்பாற்ற முடியவில்லை. Amber Marie Bellows, பரிதாபமாக 2000 அடி பள்ளத்தாக்கில் கீழே விழுந்து பலியானார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாராசூட் எதனால் திடீரென பழுதானது என்று விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒரு பெரிய சோகம் என்னவென்றால் பலியான Amber Marie Bellows, என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது. திருமணமாகி ஒரே வாரத்தில் மனைவியை பலிகொடுத்துவிட்டார் அவருடைய கணவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com