Wednesday, February 12, 2014

அட்டமஸ்கட பிக்குவிக்கு எதிராக பெற்றோர் ஆர்பாட்டம்! ஓடி மறைந்த சிறுவர் அமைப்புக்களும் மக்கள் பிரதிநிதிகளும்

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்ல விகாராதிபதி கல்யாண திஸ்ஸ தேரரினால் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்து சிறுவன் ஒருவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சிறுவர் இல்ல விகாராதிபதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அவரை 42 நாட்கள் விளக்கமறியலில் வைத்த வவுனியா மாவட்ட நீதி மன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. இந் நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை நேற்று நடைபெறவிருந்த நிலையில் விசாரணை நீதியாக இடம்பெற்று குறித்த கல்யாணதிஸ்ஸ தேரர் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி நேற்று முன்தினம்(10) காலை வவுனியா நகரில் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு அரச அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

இவ் ஆர்பாட்டம் தொடர்பாக தெரிந்து கொண்ட பல சிறுவர், பெண்கள் தொடர்பான அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் எவையும் முழுமையான ஆதரவினை இவ் ஆர்பாட்டத்திற்கு வழங்கவில்லை. வன்னியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரு மத்திய அமைச்சர், ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண அமைச்சர் ஒருவர், நான்கு வடமாகாணசபை உறுப்பினர்களும் எனப் பலர் இருந்தும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நீதிக்காக இவர்களால் செய்ய முடிந்தது என்ன? இவர்கள் இன்று நடைபெற்ற இவ் ஆர்பாட்டத்தில் ஓடி ஒழிந்து கொண்ட காரணம் என்ன? அவர்களது பிள்ளைக்கு இப்படி நடந்தால் விடுவார்களா? சிறுவர்களுக்காக குரல் கொடுக்காத நீங்கள் பிறகு ஏன் எமக்கு என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com