Friday, February 21, 2014

கையடக்க தொலைபேசியில் ஆபாசப் படம் வைத்திருந்தவருக்கு அபராதம்!

கையடக்க தொலைபேசியில் ஆபாச படக்காட்சிகளை வைத்திருந்த கிளிநொச்சி – அக்கராயன்குளத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 2500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் தொலைபேசியும் அரசுடமையாக்கப்பட்டது.


குறித்த இளைஞரை கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வாகப்தீன் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே இளைஞருக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், தொலைபேசி சிம் காட் மற்றும் மெமரி கார்டு ஆகியவற்றை அழிக்குமாறும், கைத்தொலைபேசியை அரசுடமையாக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

0 comments :

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com