Tuesday, February 11, 2014

பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பெரும்பான்மையினர் திருடர்களே! - ஜேவிபி

ஹெரோயின் போதைப் பொருள் மொத்தமாகத் தேவையென்றால், பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

இரத்மலான கொவிபெலவத்த சந்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துரைக்கும்போது,

நாடு கெட்டு சீரழிந்துள்ள நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். தற்பொழுது நாட்டில் உள்ள போதைப் பொருள் வியாபாரிகள் அவற்றை மொத்தமாக கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் தேவை என்றால், பிரதமரின் அலுவலகத்திற்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால் 105 அமைச்சர்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் திருட்டுக்கூட்டத்தினரே.

இந்த திருடர்களை அரசியல் வட்டத்திலிருந்து விரட்ட வேண்டிய காலம் வந்துள்ளது. ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் உதய கம்மன்பில அவர்தான் ஜாதிக்க ஹெல உறுமயவில் உள்ள மிகப் பெரிய பொய்யர்.

பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்காக ஜே.வி.பியே எப்பொழுதும் போராடி வந்துள்ளது. அதன் காரணமாகவே அரசாங்கம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியது என்றும் குறிப்பிட்டார்.

1 comments :

சு.ப ,  February 11, 2014 at 3:52 PM  

ஓம் ஒம். இப்ப என்னெல்லாம் சொல்ல மாட்டயள். நீங்கள் அரசாங்கத்துடன் இருக்கேக்க குடு கொண்டு வரல.. இப்பதான் இதெல்லாம் கொண்டு வருயினமே.. சரி சரி

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com