உணவுப் பொருள் விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை!
சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள இடங்களில் உள்ள உணவுகளை கையாளும் நிறுவனங்களான மொத்த விற்பனை நிலையங்கள், உணவகங்கள், களஞ்சியசாலைகள், தூர இடங்களுக்கான பேருந்துக்கள் நிறுத்தப்படும் உணவகங்கள் என்பன இரு தினங்களாக பரிசோதனை செய்யப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் தெரிவித்தார்.
இதன்போது நுகர்வோருக்குப் பொருத்தமில்லாத பழ வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கைப்பற்றட்டு அழிக்கப்பட்டதுடன், அப்பொருட்களை வைத்திருந்த உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment