Friday, February 14, 2014

மேல் மாகாணத் தேர்தலில் அரசு அமோக வெற்றி பெறும் என்பது திண்ணம்! எம்.எஸ்.எம். ஸகாவுல்லா

கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்: 1992 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலுக்கு வந்த காலப் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீர்கொழும்பு, போருதொட்ட கிளையின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டடேன். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு 2414 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். இன்று நீர்கொழும்பு மாநகர பிரதி மேயராகப் பணியாற்றுகிறேன்.

கேள்வி: நீங்கள் இரண்டு தடைவை மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் மக்களுக்கு ஆற்றிய முக்கிய சேவைகள் எவை ?

பதில்: 2006 ஆம் ஆண்டு நடைறெ;ற மாநகர சபை தேர்தலில் எமது கட்சியின் சார்பில் 14 பேர் தெரிவு செய்யப்பட்ட போது நான் பத்தாவது இடத்தில் இருந்தேன். மேல்மாகாண பெருந்தெருக்கள் அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு கட்டிட நிர்மாணம்> மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் நிமல்லான்ஸா அப்போது மேயராக இருந்;தார். அவருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினேன். 2006 ஆம் ஆண்டின் பிறகு நீர்கொழும்பு நகரம் பாரிய அபிவிருத்தியை பல்வேறு துறைகளிலும் கண்டது. நீர்கொழும்பு நவீன பஸ் நிலையம்> கடோல்கல உள்ளக விளையாட்டரங்கு > உள்ளக டென்னிஸ் அரங்கு, வீதி அபிவிருத்திகள்> ஜெயக்கா திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஹெமில்டன் கால்வாய் அபிவிருத்தி வேலைத்திட்டம்> நீர்கொழும்பு நகர உல்லாச பயணத்துறைக்கான அபிவிருத்தி வேலைத்திட்டம்>சந்தை நிர்மாணிப்;பு என பல்வேறு அபிவிருத்திகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

அதன்பின்னர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் 8942 விருப்பு வாக்குகளைப் பெற்று எமது கட்சி;யின் சார்பில் நான் இரண்டாவது இடத்தைப் பெற்றேன.; இன> மத> மொழி > அரசியல் பேதங்கள் இன்றி மக்களுக்கு நான் ஆற்றிய சேவை காரணமாகவே அதிக விருப்பு வாக்குளைப் பெற்று பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் எல்லா இன மக்களும் என்னை ஆதரிப்பதன் காரணமாகவே இந்நிலையை என்னால் அடைய முடிந்தது. தற்போது நடைபெறவுளள்ள மேல்; மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்;தில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலிருந்து ஆளும் கட்சியின் சார்;பில் போட்டியிடவுள்ளேன்.

நான் பாடசாலை ஆசிரியராக பணியாற்றியுள்ளதாலும்> எனது பெற்றோரும் ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளமையினாலும் கம்பஹா மாவட்ட பாடசாலைகளின் அபிவிருத்தியை பிரதானமாகக் கருதியே இந்த தேர்தலில் களமிறங்குகிறேன். மேல்; மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்;தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளை 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் (21 ஆயிரத்து 857 வாககுகள்) நான் பெற்றுள்ளேன். பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும்> கம்பஹா மாவட்ட தவைருமான பஷில் ராஜபக்ஷவின் பூரண ஒத்ததுழைப்பும்>மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் பூரண ஆதரவும் எனக்கு உண்டு.

கேள்வி: மாகாண சபை தேர்தலில் களமிறங்குவதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா?

பதில்: கம்பஹா மாவட்டத்தில் எமது கட்சியின் சார்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமையினால் எமது மக்களின் தேவைகளை> குறைபாடுகளை அரசாங்கத்திற்கு எட்ட வைக்க முடியாமல் உள்ளது. அந்தக் குறை எனது வெற்றியின் மூலம் நிறைவேறும். எமது சமூகத்தில் உள்ளவர்களுக்கு அரச தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல்> முன்பள்ளி கூடங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி> மதஸ்தலங்களுக்கு உதவி வழங்குதல்> விதவைகளுக்கு சுய தொழிலில் ஈடுபட உதவிகள் வழங்குதல் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலமாக சகல மக்களுக்கும் சேவை செய்வதே எனது நோக்கமாகும்.

கேள்வி: மத்திய அரசாங்கத்தில் இணைந்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை தேர்தலில் தனியாக களமிறங்கவுள்ளது. ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் உங்களுக்கு சவாலாக அமையும் என கருதுகிறீர்களா?

பதில்: 2009 இல் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையாமல் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டு தமது கட்சிக்கு 18 ஆயிரம்; வாக்குகளையே பெற்றுக் கொடுத்தனர். நான் தனி நபராக அந்த தேர்தலில் 21 ஆயிரத்து 857 வாக்குகளைப் பெற்றேன். அந்த மாகாண சபை தேர்தலில் முதன் தடைவையாகவே நான் போட்டியிட்டேன் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தேர்தல் சட்டத்தின்படி சிறுபான்மை கட்சிகள் குறைந்த வாக்குகளைப் பெற்று வீதாசாரத்தின்படி உறுப்பினர்கள் தெரிவு செய்ப்படுகின்றனர். ஆனால்> வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அவர்கள் அரசியல் செய்கிறார்கள். இப்போது மீண்டும் தேர்தல் வரும் போது தனித்து கேட்கிறார்கள். அதனால் முஸ்லிம் காங்கிரஸ் எனக்கு சவால் அல்ல. நான் சிறிது காலத்திலேயே மக்களின் உள்ளங்களை அதிகம் வென்றவன். எனது சேவை மக்களுக்குத் தேவை என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

கேள்வி: ஆளும் கட்சி மாநகர சபை உறுப்பினரான நீங்கள்; மாகாண சபைக்கு சென்று சாதிக்க நினைப்பது என்ன?

பதில்: மத்திய அரசு > மாகாண சபை> உள்ளுராட்சி சபைகள் எமது வசமே உள்ளன. அதன் காரணமாக மக்களின் ஆதரவைப் பெற்று மாகாண சபைக்குத் தெரிவாகி மிகச்சிறந்த சேவை செய்யக் கூடிய வாய்ப்பு எனக்கு உள்ளது. அதன் காரணமாகவே இந்த தேர்தலில் களமிறங்குகிறேன்.

கேள்வி: முஸ்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா உட்பட சில பேரினவாத கட்சிகளும் அமைப்புக்களும் பல்வேறு வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், முஸ்லிம்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள தெரிவித்து வரும் இந்த காலக் கட்டத்தில், முஸ்லிம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: முஸ்லிம் மக்களை பாதிக்கும் எந்தத் தீர்மானங்களையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை. பேரினவாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தின் தீர்மானங்கள் அல்ல. தமது கருத்துக்களைத் தெரிவிக்க சகலருக்கும் உரிமையுண்டு. மக்கள் தமது கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. அரசாங்கம் மக்களுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளமையே இதற்கான காரணமாகும்.

நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் அரசாங்கமே வெற்றி பெற்று வருகிறது. முஸ்லிம்களில் அதிக வீதத்தினர் அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர். நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலிலும் முஸ்லிம்கள் எமது கட்சிக்கு வாக்களிப்பர். அத்துடன் எனக்கு சகல இன மக்களினதும் வாக்குகள் கிடைக்கும் என்பது நான் போட்டியிட்ட மூன்று தேர்தல் முடிவுகளும் எடுத்துக் காட்டியுள்ளன.

கேள்வி: பொது பலசேனா உட்பட முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படும் பேரினவாதிகள் தொடர்பில் உங்களது கருத்து யாது?

பதில்: வெளிநாட்டு உதவிகளைப் பெற்று இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கவே இது போன்ற அமைப்புக்கள்; செயற்படுகின்றன. இந்த பேரினவாத அமைப்புக்கள் பற்றி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் பகிரங்கமாகவே கருத்து தெரிவித்துள்ளார்கள் விமர்சித்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாட்டில் நிலவுகின்ற சுதந்திரத்தை பயன்படுத்தி அரசாங்கத்திற்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கவே இந்த அமைப்பின் செயற்பாடுகளை நான் கருதுகிறேன். மக்கள் ஒன்றுபட்டால் பேரினவாதிகளை தோற்கடிக்க முடியும்.

கேள்வி: நாட்டில் அமைதி நிலவுகிறது. பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ப்படுகின்றன. ஆயினும், மக்கள் பெரும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். இந்நிலையில்; நடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தலில் மக்கள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்களா?

பதில்: யுத்தத்தில் வெற்றி பெற்று நாட்டில் நிரந்தர அமைதியையும் சமாதானத்தையும் ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.. அவர் அன்று அளித்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றினார். அதன் பின்னர் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். வீதியில் இறங்கிப் பார்த்தால் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளமை நன்கு விளங்கும்.

விலைவாசி அதிகரிப்பு என்பது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஊடாக மக்களின் பொருளாதார நிலை மேன்மையடையும். எமது நாட்டில் வறுமையின் காரணமாக எவரும் மரணிப்பதில்லை. மக்களுக்கு சமாதானமும் அமைதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவு அளித்து வருகின்றமை தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெருவது நிச்சயமாகும்.

கம்பஹா மாவட்டத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,; மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் நிமல்லான்ஸா<முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இந்த தேர்தலில் எமது கட்சி கம்பஹாவில் பெரு வெற்றி பெறுவதற்கு பிரதான காரணமாக அமையும் என்பது உறுதியாகும். இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாங்கள் மக்களுக்கு ஞாபகப்படுத்தினால் மட்டும் போதும் வெற்றி எமது வசமாகும். நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com