Wednesday, February 19, 2014

மட்டக்களப்பில் இராணுவத்திற்கு பயிலுநர் பெண் சிப்பாய்கள் ஆட்சேர்ப்பு நேர் முகப்பரீட்சை!

இலங்கை இராணுவத்திற்கு பயிலுநர் பெண் சிப்பாய்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர் முகப்பரீட்சையொன்றை இலங்கை இராணுவம் தற்போது மட்டக்களப்பில் நடத்தி வருவதாகவும் அதற்கு இளம் யுவதிகளை வந்து கலந்து கொள்ளுமாறும் கேட்டு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர்.


18 தொடக்கம் 24 வயதிற்கிடைப்பட்ட திருமணமாகாத, குறைந்தபட்சம் எட்டாம் தரத்தில் சித்திடைந்த யுவதிகள் நேர்முகப் பரீட்சைக்குச் சமுகமளிக்கலாம் என்று அந்தத்துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இராணுவத்தில் சேர்ந்து கொள்ளும் யுவதிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கப்பெறுவதாகக் கூறும் இராணுவத்தினர் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில், ஆரம்ப பயிற்சிக் காலத்தில் 27000 ரூபா சம்பளம் கிடைப்பதுடன் காப்புறுதி, உணவு, தங்குமிட வசதி, குடும்பத்திருக்கும் உரித்துடையதான மருத்துவ வசதிகள், இலவச பிரயாண மற்றும் நலன்புரி வசதிகளுடன் அரச ஊழியர்களுக்குக் கிடைக்கக் கூடிய அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை இராணுவத்தில் 15 வருட சேவை முடிவுற்றதும் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை 18.02.2014 தொடக்கம் 20.02.2014 வரை மட்டக்களப்பு மாநகர சபையிலும், 21 ஆம் திகதி தொடக்கம் அம்பாறை நகர சபையிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com