Tuesday, February 18, 2014

இலங்கைக்கெதிராக சர்வதேச சக்திகள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் இனப்புரிந்துணர்வை சீர்குலைக்கும்! ஐ.நா. மாரியிடம் ரவூப்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச சக்திகளோ, வேறு சக்திகளோ மேற்கொள்ளும் செயற்பாடுகள், இனங்க ளுக்கிடையிலான புரிந்துணர்வை சீர்குலைக்குமென, நீதி யமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பாளர் மாரி யமாசிட்டோவை நீதியமைச்சில் இன்று சந்தித்த போது, அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வில் பாதிப்பு ஏற்படலாம். பிரச் சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண வேண்டும். இலங்கைக்கே பொருத் தமான ஒரு தீர்வாக அமைவது சிறந்ததாகும். இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு, அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

வழக்குகளை தாமதமின்றி விசாரிப்பதற்கும், தீர்ப்புகளை விரைவாக வழங்கு வதற்கும் பிரதம நீதியரசரின் வழிகாட்டலில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, நீதிமன்றம் இன்றி, இணக்க சபைகளுடாக மாற்றுத்தீர்வுகளை காண்பதற்கும், நடவடிக்கை எடுத்துள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com