பயிற்றுவிப்பாளரின் விரலை கடித்து துண்டாடிய சிம்பன்சி - தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சம்பவம் !!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புதன்கிழமை சிம்பன்சி குரங்கொன்று அதன் பயிற்றுவிப்பாளரின் ஆட்காட்டி விரலை கடித்து துண்டாடியுள்ளதாக மிருகக்காட்சிசாலை உத்தியோ கஸ்தர் ஒருவர் தெரிவித்தார். நீண்டகாலமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ,இருக்கும் குறித்த சிம்பன்சிக்கு பயி ற்றுவிப்பாளர் டொபி யொன்றை கொடுக்க முயற்சித்த போதே அவரது ஆட்காட்டி விரலை கடித்து கையிலிருந்து வேறாக் கியுள்ளது.
துண்டாடப்பட்ட விரலை குளிரூட்டியில் வைத்து களுபோவில வைத்தியசாலை க்கு கொண்டு சென்ற போதிலும் விரலை கையுடன் பொருத்த முடியாமல் சென்று ள்ளது. குறித்த சிம்பஞ்சி செயற்பாடு குறித்து அதன் மானசீக நிலை பரிசோதிக் கப்படவுள்ளதாக மிருகக்காட்சிசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment