Wednesday, February 19, 2014

ஊடகத்துறை 95 வீதமானவற்றை இருட்டடிப்புச் செய்கின்றன...! சாடுகின்றார் திலான் பெரேரா

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பாக ஊடகத்துறை செய்திகளைப் பொறுத்தவரையில் 95 வீதமான அளவு நல்ல விடயங்கள் வெளிக்கொணரப்படுவதில்லை.

அதில் மிக மோசமானகதாகக் காணப்படும் 5 வீதமான விடயங்களே மிகப்பெரிதாக சுவைமிக்கதாக வெளிக் கொணரப்படுகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்பபு தொடர்பாக தொழில்சார் ஊடகவியலாளர் அறிவுறுத்தும் செயலமர்வு கண்டி ரிச் ஹோட்டலில் நேற்று (18) நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் திலான் பேரேரா அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந் பேசுகையில்

ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில் வீழ்ந்திருந்த இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை இன்று உயர்ந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.. ஆனால் எங்களுடை கணிப்பீட்டின்படி நூற்றுக்கு 95 வீதமான மக்கள் நல்ல உயர் நிலை அடைந்துள்ளனர். தங்களுடைய வீடு வசதிகளை அமைத்துக் கொண்டு வாழக் கூடியவர்களாக உள்ளனர். அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில் எழுபது வீதமான பெண்களே சென்றனர். தனக்கு கிடைத்த தகவலின்படி கடந்த மூன்று வருடங்களுக்குள் அந்த நிலை மாற்றம் செய்யப்பட்டு ஆண்கள் கூடுதலாக வெளிநாடு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பீட்டின் படி ஆண்கள் நூற்றுக்கு 43 சதவீதமான வெளிநாடு செல்பவர்களாகவும் பெண்கள் 37 சதவீதமானவர்கள் வெளிநாடு செல்பவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி குறைவடையச் செய்தமை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரச செய்திப் பணிப்பாளர் வசந்த பிரிய ராமநாயக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் மங்கல ரன்தெனிய மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடவியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது. அதன் போது கலந்து கொண்ட ஊடகவியலாளர்களான மஹ்ரூப். புஷ்பகுமார, இக்பால் அலி ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் திலான் பேரேராவிடமிருந்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதைப் படங்களில் காணலாம்.

(இக்பால் அலி)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com