Tuesday, February 11, 2014

20 வருடங்களாக பரீட்சை குறிப்புக்களை காதினுள் மறந்திருந்த சவூதி நபர்!

பரீட்சையில் மோசடி செய்வதற்காக குறிப்புகளை எழுதிய காகிதம் ஒன்றினை காதினுள் மறைத்து வைத்த நபரொருவர் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 20 வருடங்களாக மறந்து போயிருந்த வேடிக்கையான சம்பவமொன்று சவூதி அரேபியாவில் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி நபர் காது வலியால் கடந்த வாரம் அவதிப்பட்டபோதே தான் பரீட்சை மோசடிக்காக மறைத்து வைத்த குறிப்பு தாள் விடயம் தெரியவந்துள்ளதுடன் இந்த மோசடிக் குறிப்பு தன்னை பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு முன்னர் பரீட்சையில் சித்தியடையச் செய்ய உதவியது எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, திருமணம் செய்து, பிள்ளைகளும் பிறந்துவிட்டது. ஆனால் அந்த குறிப்பு தாள் தொடர்பில் அவர் முற்றாக மறந்துவிட்டார்.

இந்த நிலையில் சுமார் 20 வருடங்கள் கழிந்த நிலையில் காதில் ஏதோ அடைத்திருப்பது போலவும் வலியை உணர்ந்து வைத்தியரை நாடியபோதே காதில் உள்ள கடதாசித் துண்டே வலிக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து கடதாசி காதிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com