ஆஸி. தம்பதியினரின் மகளை முத்தமிட்ட இளைஞன் கைது !!
இலங்கைக்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்ட அவுஸ்திரேலிய தம்பதியினரின் 9 வயது மகளை கட்டிய ணைத்து உதட்டில் முத்தமிட்ட 19 வயது இளைஞரொருவர் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, ரூமஸ்ஸல் கடற்கரையில் இந்த அவுஸ்திரேலிய தம்பதியினர் தமது மூன்று பிள்ளைகளுடன் நீராடிக் கொண் டிருந்துள்ளனர். அவர்களது 9 வயதான இளைய மகள் கற் பாறை மீது நடந்து சென்ற போது இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பாறைக்கு அருகில் நின்ற இந்த இளைஞர் 'கம், கம்' என்று அழைத்தபோது சிறுமி அருகில் சென்றுள்ளார். உடனே இளைஞன் சிறுமியை கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமி கூக்குரலிடவே பெற் றோரும் அருகிலிருந்தவர்களும் இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படை த்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் காலி பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரி விக்கும் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment