மாட்டிக்கிட்டார் மாட்டிக்கிட்டார் புலிப்பினாமி மாட்டிக்கிட்டார்!
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு எத்தனித்தார் எனக் குறிப்பிடப்படும் புலிப் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் பிரான்ஸ் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரான்ஸிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதியை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புவந்தவுடன் ஆவன செய்யப்படவுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர், இலங்கையில் ஆயுள் சிறைக்கைதியாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்பதுடன், அவரைக் கண்டவிடத்தில் கைதுசெய்து இலங்கை அரசுக்கு ஒப்படைக்குமாறு சர்வதேச பிடியாணையும் விடுக்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment