Saturday, January 25, 2014

விஜய் ரசிகர்களின் போராட்டத்தை புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாக காட்ட உதயன் பத்திரிகை முயற்சி

கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளியாகிய சூரியகாந்தி என்னும் சிறப்பிதழில் விஜயின் வெற்றிப் படமான ஜில்லா படம் தொடர்பான திரை விமர்சனம் வெளிவந்தது. அதில் அப் படம் தொடர்பாக கருத்துக் தெரிவித்த உதயன் பத்திரிகை அப் படம் மொத்தத்தில் ஒரு வேஸ்ட் என்னும் பாணியில் கருத்துத் தெரிவித்திருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் அலுவலகத்திற்கு முன்னால் ரசிகர்களால் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தை இராணுவ புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமாக உதயன் நித்தரிக்க முயல்வதாக விஜய் ரசிகார்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுதந்திரமான முறையில் தமக்கு விரும்பிய நடிகருக்கு ஆதரவாக செயற்படுவது குற்றமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பில் தமது நடிகராகிய விஜய் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இராணுவ புலனாய்வாளர்களால் இவ் ஆர்பாட்டம் நடத்தப்பட்டதாக காட்டி அனுதாபத்தை சர்வதேச ரீதியில் பெற உதயன் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இதே சூரியகாந்திப் பகுதியில் கடந்த வருடம் முற்பகுதியில் வன்னி மாணவர்களை மாடுகள் எனவும் புனித தலமான வற்றப்பளை ஆலயத்தை கொச்சப்படுத்தியும் உதயன் செய்தி வெளியிட்டு வடக்கில் பரவலாக உதயனுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments :

Anonymous ,  January 26, 2014 at 10:59 AM  

விஜய், உதயன் , ஆர்ப்பாட்டக் காரர்கள் ஐங்கரநேசன் அனைத்தும் சுத்தப் புண்ணாக்குகள். நாட்டுக்கு இதுதான் இப்ப ரொம்பத் தேவை ஆமா !!!!!!!

completement poubelle.......

சுத்த garbage

ஸ்ரீதரன் கனடா

மகா தமிழ் ஈழம் ,  January 26, 2014 at 11:59 AM  

விஜய் ரசிகர்கள் விஜய்க்காக,உதயன் பத்திரிக்கைக்கு எதிராக போரடாமல் பிரபாகரனுக்கும் மற்றய பயங்கரவாதிகளுக்கும் கட் அவுட் வைத்து பூசை செய்து நாசமா போக வேண்டும் என்பது புலம் பெயர் புலி புண்ணாக்குகளில் கனவு ஆசை. அதன் காரணமாகவே கோமாளி ஐங்கரநேசனுக்கு ஆதரவு, விஜய் ரசிகர்களுக்கு எதிர்ப்பு.

Anonymous ,  January 26, 2014 at 9:30 PM  


வடபகுதி தமிழ்மக்கள் 3 வருட போரின் பின்னர் இப்போதுதான் கொஞ்சம் நல்ல காற்றை சுவசிகிறார்கள்,வளரும் இளம் வாரிசுகள் சந்தோசமாக இருந்தால்தான் இவர்களால் எதையும் சாதிக்க முடியும்.ஒரு சினிமா நடிகரின் ரசிகராக இருப்பது பிழையா,முன்னர் ஒரு இயக்கத்துக்காக அழிந்து போன இளையர்கள் ,இவர்களின் ஆன்மாக்கள் எல்லாம் அரசியல் இலாபம் தேடும் அரசியல் வாதிகளை சும்மா விடாது.வாழும் வளரும் இளம் pillaikalai வாழ விடுங்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com