Monday, January 27, 2014

இனவழிப்பு என்ற சொல்லை பாவித்தால் சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் - சி.வி.விக்னேஸ்வரன்


இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை விபரிக்கும் போது இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்பதுடன் இதற்கு பதிலாக இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லை பாவிக்குமாறு இன்று இடம்பெற்ற மாகாணசபை அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையை விடுத்தார்.

திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்த போதே இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லினை பாவிக்கும் போது சில சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் விசாரணைகளின் பின்னரே இங்கு நடைபெற்றது இனவழிப்பா இல்லையா என்பதை கூறமுடியும் அதுவரைக்கும் இங்கு நடைபெற்றது இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிப்பதே நன்று என விக்னேஸ்வரன் இதன் போது தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com