Monday, January 27, 2014

மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை விரும்பவில்லை- யாழ்.கட்டளைத்தளபதி உதயபெரேரா!


மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை என்பதால்தான் நான் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியாக பெறுப்பேற்றது தினத்தில் இருந்து இன்றுவரை 200 க்கு மேற்பட்ட காவலரண்களும் 30 க்கு மேற்பட்ட இராணுவ விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி உதயபெரேரா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ் இராணுவ கட்டளைத்தளபதிக்குமிடையிலான சந்திப்பு பலாலி கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

இராணுவ கட்டளைத்தளபதியுடனான இந்ததச்சந்திப்பில் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது இதற்கு பதிலளித்த கட்டளைத்தளபதி மக்களுக்கு உரிமையான வாழ்விடங்களை மீள ஒப்படைப்பதில் தாம் கூடிய அக்கறை கொண்டிருப்பதாகவும், அதிலும் வலிகாமம் வடக்குப் பகுதியிலுள்ள பல கிராமங்களை மக்களிடம் மீளக் கையளிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுவதுடன் இதன் முதல் கட்டமாக வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் வளலாய் கிராம சேவர் பிரிவினை முழுமையாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளை மலிவு விலையில் விற்பதனால் யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பாதிப்படைவதாக கட்டளைத்தளபதிக்கு தெரிவிக்கப்பட்டதற்கு தெரிவித்த கட்டளைத்தளபதி அதுதொடர்பாக ஆராய்ந்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com