மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செய்கையில் இடுபட்ட மூவர் கைது!
தனமல்வில, ஹம்பேகமுவ வனப்பகுதியில் கண்டி கலால் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 3 ஏக்கருக்கும் அதிகமான பிரதேசத்தில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கரத்த தெரிவித்த கலால் அதிகாரி ஒருவர் இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் பல பகுதிகளில் சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் முதன் முறையாக அதிகளவான கஞ்சா பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட பிரதேசம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment