Wednesday, January 29, 2014

ஜேர்மனியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் திரு நெவில் பெரேரா அவர்களுக்கு பாராட்டு.

தமிழர்கள் தாய்மொழிக்கு வழங்கும் முக்கியத்துவத்தை மெச்சுகின்றார் தூதர்.

இலங்கையில் அளிக்கப்படும் அரச இலக்கிய அளிப்புக்கள் 2012 ஆம் ஆண்டிற்கு வழங்கப்படும் வைபவமானது கொழும்பிலுள்ள பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இங்கு அநேக எழுத்தாளர்கள் தங்களுடைய பங்களிப்புக்கான அளிப்புக்களைப் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் சிறார்களுக்கான அதிசிறந்த இலக்கிய அளிப்பு திரு நெவில் பெரேராவினால் எழுதப்பட்ட அவருடைய 'Kitty and bell Necklece' என்ற நூலுக்கு வழங்கப்பட்டது.

திரு நெவில் பெரேரா நோய் காரணமாக இலங்கை அரசாங்க இலக்கிய அளிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு அங்கு போக முடியாமல் இருந்ததன் காரணமாக ஜேர்மனியிலுள்ள இலங்கைத் தூதரகமும் இலங்கைச் சமூகமும் திரு நெவில் பெரேராவினால் இலக்கியத்துக்கு செய்யப்பட்ட பங்களிப்புக்கும் அவருடைய சாதனைக்குமாக இந்த அளிப்பை வழங்கி அவருக்கு பாராட்டைத் தெரிவிப்பதற்காக நிகழ்ச்சியொன்றை ஒழுங்கமைத்திருந்தனர்.

அதிமேதகு தூதர் தமது உரையில் திரு நெவில் பெரேராவுடனான தமது தொடர்புகள் பற்றிய நினைவுகளை மீள நினைவு கூர்ந்து மாணவ செயற்பாடுகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நாட்களைப் பற்றி அவருக்கு ஞாபகமூட்டியுள்ளார். தூதர் 'Kitty and bell Necklece' என்ற அளிப்பைப் பெறும் நூல் பற்றிய தமது நூல் ஆய்வில் இந்த நூலானது ஓர் கவர்ச்சிகரமான தலையங்கங்கத்தைக் கொண்டிருப்பதாகவும் இந்தக் கதையின் தொனியும் உயிர் நாடிப் பகுதியும், பாங்கும் புதுமையானதும் உணர்ச்சிகரமானதுமாக இருப்பதுடன் இது கதை சொல்லும் மரபார்ந்த வழியில் இருந்து விலகி புதிய சிந்தனைப் பாதையொன்றை வழங்குகின்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த கதையை விவரிப்பதில் திரு நெவில் பெரேராவினால் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி சொல்வன்மையுடையதாகவும் புரிந்து கொள்ளக் கூடியதாகவுமுள்ளது.

தூதர் 'இந்தக் கதையானது எமக்கு எவ்வண்ணம் சமாதானத்தையும் இசைவாக்கத்தையும் செய்ய வேண்டும் என்பதையும் நேர்மையான வாழ்க்கைமுறை ஒன்றைப் பின்பற்ற வேண்டுமென்பதையும் எமக்குப் போதிக்கின்றது. திரு சான்த் ஹேரத்தினால் செய்யப்பட்ட வரைபடம் இக் கதையின் கதாபாத்திரங்கள் யதார்த்தத்துக்கு மெருகூட்டுகின்றது' எனவும் குறிப்பிட்டார்.

அதிமேதகைய தூதர் இலங்கை சமூகத்தவர்களிடம் அவர்கள் தங்களுடைய தாய்மொழிகளாகிய சிங்களத்தையும் தமிழையும் கற்பதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ஜேர்மனியிலுள்ள தமிழர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்கு வழங்குகின்ற உயர் முக்கியத்துவம் மெச்சத்தகுந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இலங்கைத் தூதரகமானது இலங்கையின் கல்வி அமைச்சிடம் இருந்து நூல்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை அவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் அவர்களுக்கு ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் மெய்ன்ஸிலுள்ள ஜேனாஸ் குட்டென்பார்க் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகிய வணக்கத்துக்குரிய ரத்மலானே புன்னியரத்ன தேரர் இந்த நூலை மீளாய்வு செய்துள்ளதுடன் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள தொடர்பில் பிள்ளைகளின் இலக்கியத்தின் தாக்கம் பற்றி துலாம்பரமாக எடுத்துக் காட்டிக் குறிப்பிட்டுள்ளார்.

திரு நெவில் பெரேரா இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தமைக்காக தூதரகத்துக்கும் இலங்கைச் சமூகத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஜேர்மனியிலுள்ள ஆசியக் கலைகள் நூதன சாலையில் 'இலங்கையின் நிலத் தோற்றப்பாடுகள் என்ற தலையங்கத்தின் கீழ் வரலாற்று ரீதியான 19 ஆம் நூற்றண்டில் புகைப்படங்களின் பொருட்காட்சியொன்றை ஒழுங்குபடுத்துவதற்கான கொடை முனைவைப் பாராட்டியுள்ளார். இவற்றைப் பார்ப்பதற்காக அனேக ஜேர்மனியர்கள் வருகை புரிந்து கொண்டிருக்கினர் அத்துடன் கட்டுரைகளுடன் இலங்கையின் அரிய புகைப்படங்களைக் கொண்ட பொருட்காட்சி பற்றிய பட்டியலொன்றையும் வெளியிட்டமைக்காகவும் தூதரை அவர் பராட்டியுள்ளார்.

திரு பெரோவின் வதிவிட கிலி நீக்கி நோர்ட்பார்னின் மாநகர முதல்வராகிய கலாநிதி ஹான்ஸ் குண்தர் ஓபர்;லக் அவர்களும் இலங்கை சமூக உறுப்பினர்களும் தூதரக பதவியினரும் இந்த நிகழ்ச்சியில் பஙகுபற்றியுள்ளனர்.

கலாநிதி ஒபர்லக் சமிபத்திய எதிர்காலத்தில் கிலி நீக்கி நோர்ட் பானில் உள்ள நகரமண்டபத்தில் திரு பெரேராவைப் பாராட்டுவதற்கு நிகழ்ச்சியொன்றை ஒழுங்குபடுத்துவதற்கான தமது திட்டத்தையும் அறிவித்தார்.0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com