தமிழ், சிங்கள புதுவருடதினமன்று யாழ் தேவி யாழ்.வரும் - ரயில்வே திணைக்களம்
இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடதினத்தன்று யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்பொழுது கிளிநொச்சி வரை தனது சேவையில் ஈடுபடும் யாழ்தேவி அடுத்த மாதம் முதல் பளை வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனபதுடன் பளையில் இருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரையான 56 கிலோ மீற்றர் ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது மேற் கொள்ளப்பட்டு வருவதுடன் பளைக்கும் யாழ் ரயில் நிலையத்திற்கும் இடையில் 10 ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2 comments :
அதில் நானும் வருவேன்.
புதிய பிளாவில் பழைய கள்ளு பருகுவேன் மற்றவர்களுக்கும் பருக்குவேன்.
Neengal ellam, Palaya pulaavil, puthiya thani mara kallu kudikka maatteengalo???
Pula palasaa irunthaalum, puthiya kallu thaane rasham!!!
Post a Comment